Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

போடியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

போடியில் உள்ளாட்சி தின விழா

போடி, நவ. 1: போடி நகராட்சி சார்பில் நடைபெற்ற உள்ளாட்சி தின விழாவில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

போடி நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விழாவாகவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர்களைக் கெüரவிக்கும் விழாவாகவும் இந்த விழா அனுசரிக்கப்படுகிறது.

போடி நகராட்சி சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து வரும் நகராட்சி விழாக்களில் பணியாளர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.

பொதுமக்களுக்காக நகராட்சிப் பணியாளர்கள் கொண்டுவரும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

நகர்மன்றத் தலைவர் ரதியாபானு, துணைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், நகராட்சி உதவிப் பொறியாளர் குணசேகரன் பொறியியல் பிரிவு திட்டங்கள் பற்றியும், சுகாதார ஆய்வாளர் சென்றாயன் சுகாதாரம் பேணப்படும் முறைகள் பற்றியும், சுய உதவிக் குழு சமூக அமைப்பாளர் தனிக்கொடி சுய உதவிக் குழுக்கள் செயல்பாடு பற்றியும், கட்டடப் பிரிவு அலுவலர் முருகானந்தம் கட்டடப் பிரிவு பணிகள் பற்றியும், வருவாய் ஆய்வாளர் ராமராஜ் வரிகள் வசூல் செய்வது பற்றியும் பேசினர்.

நகராட்சிப் பிரிவு அலுவலர் ஜலீல் தொகுத்து வழங்கினார்.

நகராட்சி மேலாளர் ராமநாதன் வரவேற்றார்.

 

மம்சாபுரம் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

மம்சாபுரம் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.1: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் ரா.கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ஆ.காமராஜ் வரவேற்றார்.

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேரூராட்சி தலைவர் ரா.கண்ணன் உரையாற்றினார்.

விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா, ஆசிரியர்கள் பாத்திமா ஞானம், விஜயகுமார், சண்முகநாதன், ரெங்கலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவையொட்டி, பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு, கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் மாணவ, மாணவியரின் பல்வேறு சுகாதார விழிப்புணர்வு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.

 

காரைக்குடியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

காரைக்குடியில் உள்ளாட்சி தின விழா

காரைக்குடி, நவ. 1: காரைக்குடி நகராட்சி சார்பில், உள்ளாட்சி தினவிழா ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை தலைமை வகித்து, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்துப் பேசினார்.

சேதுராஜன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர் என். முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ. ஷேக்காதர் பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நகராட்சி உதவிப் பொறியாளர் எம். வேலுச்சாமி வரவேற்றார். துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

 


Page 782 of 841