Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா

மதுரை, நவ. 1: மதுரை மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆணையர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்து, உள்ளாட்சி தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்கி பேசியதாவது:

உள்ளாட்சியில் நடைபெறும் அனைத்துப் பணிகளும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உள்ளாட்சி தின விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உள்ளாட்சிகளின் செயல்பாடு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவுவது தெரிந்தவுடன், மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு மூலமாக நாளொன்றுக்கு 3 சிறப்பு முகாங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக, தமுக்கம் மைதானத்தில் இருந்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வரை உள்ளாட்சி தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில், பள்ளி மாணவ, மாணவியர், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

உதவி ஆணையர் (தெற்கு) .தேவதாஸ் வரவேற்றார். மண்டலத் தலைவர்கள், உதவி நகர் நல அலுவலர் யசோதமணி, உதவி ஆணையர்கள் சந்திரசேகரன், யு.அங்கயற்கண்ணி, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டத்தில்...: இதேபோன்று, மதுரை மாவட்டத்தின் உள்ள நகராட்சி, ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தின விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

பழனி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

பழனி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

பழனி, நவ. 1: பழனியில் நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

பழனி நகராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் காளிமுத்து வரவேற்றார். அன்பழகன் எம்.எல்.. முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ஹக்கீம் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவை முன்னிட்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. நகராட்சி ராஜகோபால் பூங்காவில் மரம் நடும் விழா நடைபெற்றது.

அடிவாரம் சன்னதி வீதியில் இருந்து பஸ் நிலையம் வரை சுகாதாரப் பணியாளர்களின் மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலையில் நகராட்சி அலுவலகம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சுற்றுப்புற சுகாதாரம், பெண் சிசுக் கொலை குறித்த பதாகைகளை மகளிர் ஏந்திச் சென்றனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சின்னச்சாமி பரிசுகளை வழங்கினார்.

நகராட்சி மேலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

 

உள்ளாட்சி தினவிழா

Print PDF

தினமணி 2.11.2009

உள்ளாட்சி தினவிழா

சென்னை அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் நகர்மன்றத் தலைவர் பாரதிகுமார்.

 


Page 783 of 841