Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மின் இழப்பை குறைக்க 110 நகரில் டிஜிட்டல் மீட்டர்

Print PDF

தினமலர் 24.09.2009

 

சென்னை அருகே புதிய மாநகராட்சிகளை அமைப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம்

Print PDF

தினத்தந்தி 24.09.2009

Last Updated on Thursday, 24 September 2009 11:14
 

புதிய மாநகராட்சிகள் எப்போது? தமிழக அரசு ஆய்வு

Print PDF

தினமணி 24.09.2009

புதிய மாநகராட்சிகள் எப்போது? தமிழக அரசு ஆய்வு

சென்னை, செப். 23: சென்னையைச் சுற்றி புதிய மாநகராட்சிகள் உருவாக்குவது குறித்து முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

சென்னையைச் சுற்றியுள்ள நகரங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அவற்றை விரிவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இது தொடர்பாக ஆராய வருவாய்த் துறை ஆணையர், பெருநகர வளர்ச்சிக் குழும துணைத் தலைவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. சென்னை புறநகர்ப் பகுதிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, திட்டங்களை வரைவு செய்ய, இரண்டு வகையான பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கியது.

மாநகராட்சி விரிவாக்கம்... சென்னை மாநகராட்சி 176 சதுர கி.மீ. பரப்பளவுக்கு உள்ளது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கத்திவாக்கம், மணலி, ஆலந்தூர் உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளை சென்னை மாநகராட்சிப் பகுதியுடன் இணைத்து, பரப்பளவை 760 சதுர கி.மீ. அளவுக்கு அதிகரிப்பது என்ற ஒரு யோசனையையும், சென்னை மாநகராட்சியுடன் ஆவடி, தாம்பரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது என்ற மற்றொரு யோசனையையும் அந்தக் குழு முன்வைத்தது.

முதல்வர், துணை முதல்வர் ஆய்வு... இது குறித்த அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதன் காட்சிப் பட விளக்கத்தை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் சி.எம்.டி.. அதிகாரிகள் புதன்கிழமை விளக்கினர்.

இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் யோசித்துச் செய்யப்பட வேண்டியது. புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பெரிய அளவுக்கு முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. மேலும் பல கூட்டங்கள் நடத்தப்பட்ட பிறகே முடிவுகள் எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 24 September 2009 06:51
 


Page 789 of 841