Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

விளம்பர பேனர்கள்: அரசு எச்சரிக்கை

Print PDF

தினமணி 17.09.2009

விளம்பர பேனர்கள்: அரசு எச்சரிக்கை

காஞ்சிபுரம், செப். 16: காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதியின்றி அரசியல், சமயம் சார்ந்த டிஜிட்டல், விளம்பர பேனர்கள், பலகைகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனர்கள், விளம்பர தட்டிகள், பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், தேவையற்ற ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகின்றன. எனவே, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கல் தொடர்பாகவும், வியாபார விளம்பரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 17 September 2009 05:50
 

நகராட்சி வெளிப்புறப் பணியாளர்க்கு இலவச செல்போன்

Print PDF

தினமணி 16.09.2009

நகராட்சி வெளிப்புறப் பணியாளர்க்கு இலவச செல்போன்

திருப்பத்தூர், செப். 15: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திருப்பத்தூர் நகராட்சி வெளிப்புறப் பணியாளர்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நகரமன்றத் தலைவர் சொக்கம்மாள் துளசிநாதன் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்எல்ஏ என்.கே.ஆர்.சூரியகுமார், நகராட்சியில் பணிபுரியும் வெளிப்புற பணியாளர்கள் 29 பேருக்கு, அவர்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ளும் வகையில் செல்போன்களை வழங்கினார்.

நகராட்சியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள் 156 பேருக்கு இலவச சீருடை, 75 பேருக்கு மகப்பேறு நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அண்ணாவின் கருத்துகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, நகர மன்றத் துணைத் தலைவர் சாந்தி சங்கர், நகர மன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 16 September 2009 11:11
 

கரூர் பேருந்து நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி 16.09.2009

கரூர் பேருந்து நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு

கரூர், செப். 15: கரூர் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நகராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் முத்துகுமாரசுவாமி பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சித் தலைவர் ப. சிவகாமசுந்தரி, கவுன்சிலர்கள் இரா. பிரபு, ஆண்டாள் பாலகுரு, சுப்பன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

பின்னர், சம்வப இடத்துக்கு வந்த நகராட்சி ஆணையர் ஆர். ரமணியிடம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் உள்ள கழிப்பறையை தூய்மையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, ரூ. 4 லட்சத்தில் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஆணையர்.

Last Updated on Wednesday, 16 September 2009 11:10
 


Page 797 of 841