Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

செம்பாக்கம் பேரூராட்சியில் நவீன உடற்பயிற்சி மையம்

Print PDF

தினமலர் 11.09.2009

 

காந்தி மார்க்கெட்டில் ரூ. 3.60 லட்சத்தில் புதிய நவீன கழிப்பறை திறப்பு

Print PDF

தினமணி 11.09.2009

காந்தி மார்க்கெட்டில் ரூ. 3.60 லட்சத்தில் புதிய நவீன கழிப்பறை திறப்பு :

திருச்சி, செப். 10: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ. 3.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நவீன கழிப்பறையை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தலைமை வகித்தார். மாநகர மேயர் எஸ். சுஜாதா, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, 41-வது வார்டு கிருஷ்ணமூர்த்திநகர், 42-வது வார்டு எஸ்எம்இஎஸ்சி காலனி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் நேரு பெற்றார்.

காஜாமலை முஸ்லிம் தெரு பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் ரூ. 2,000 உதவித் தொகை மற்றும் நிவாரண உதவிகளை உடன் வழங்க அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட ஹபிப்புன்னிசாவுக்கு 20,000 ரூபாயை தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கினார் அமைச்சர்.

Last Updated on Friday, 11 September 2009 10:33
 

கொடைக்கானலில் புதிய பஸ் நிலைய பணிகள்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி 11.09.2009

கொடைக்கானலில் புதிய பஸ் நிலைய பணிகள்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு :

கொடைக்கானல், செப். 10: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் புதிய பஸ் நிலையப் பணிகளை நகர்மன்றத் தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கொடைக்கானலில் ரூ.4.30 கோடி செலவில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 20 மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன.

ஏறக்குறைய 60 சதவீதப் பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் பார்வையிட்டு, விரைவாக பணிகள் முடிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் ராஜாராம், ஒப்பந்ததாரர் ரசூல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது:

கொடைக்கானல் புதிய பஸ் நிலையப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ஒரு சில மாதங்களுக்குள் பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Last Updated on Friday, 11 September 2009 10:31
 


Page 800 of 841