Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ராசிபுரம் நகரில் இரு உயர் கோபுர மின் விளக்கு

Print PDF

தினமணி 27.08.2009

ராசிபுரம் நகரில் இரு உயர் கோபுர மின் விளக்கு

ராசிபுரம், ஆக.26: ராசிபுரம் நகராட்சி போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் இரு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு கோபுரங்கள் இயக்கி வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

விழாவில் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் தலைமை வகித்தார். ராசிபுரம் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி முன்னிலை வகித்தார். விழாவில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் எஸ்.காந்திசெல்வன் பங்கேற்று மின் விளக்கு கோபுரங்களை இயக்கி வைத்தார்.

இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம், நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.ரங்கசாமி, உறுப்பினர் வி.பாலு, திமுக நெசவாளர் அணி ஆர்.பிரபாகரன், என்.ஆர்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

மெரினா நீச்சல் குளம்: ரூ.70 லட்சத்தில் சீரமைக்க திட்டம்

Print PDF

தினமணி 27.08.2009

மெரினா நீச்சல் குளம்: ரூ.70 லட்சத்தில் சீரமைக்க திட்டம்

சென்னை, ஆக. 26: மெரினா நீச்சல் குளம் ரூ.70 லட்சத்தில் விரைவில் சீரமைக்கப்படும் என்று மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த நீச்சல் குளத்தை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னர் அவர் கூறியதாவது: மெரினா நீச்சல் குளத்தைச் சீரமைக்க ரூ.70 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றுவதற்கான தனி அறைகள், கழிப்பறைகள், இருக்கைகள், குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. நுழைவுச் சீட்டு வழங்கும் அறை, வாகன நிறுத்தும் இடம் ஆகியவை புதுப்பிக்கப்படுகின்றன.

 

சென்னை நகரில் விளம்பரம் எழுதவும், சுவரொட்டி ஒட்டவும் தடை

Print PDF

தினமலர் 26.08.2009

 

 

 


Page 812 of 841