Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோவை மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று நடக்கிறது

Print PDF

தினத்தந்தி      14.11.2013

கோவை மாநகராட்சி சிறப்பு கூட்டம் இன்று நடக்கிறது

கோவை மாநகராட்சியின் அவசர சிறப்புக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மாநகராட்சி பிரதான அவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

இந்த தகவலை கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா தெரிவித்துள்ளார்.

 

அம்மா உணவகத்தில் இன்னும் 10 நாளில் சப்பாத்தி

Print PDF

தினமணி           09.11.2013

அம்மா உணவகத்தில் இன்னும் 10 நாளில் சப்பாத்தி

அம்மா உணவகங்களில் சப்பாத்திகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இன்னும் 10 நாள்களில் முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு மலிவு விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உணவகத்தில் ரூ. 3-க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன.

குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்கள் கொள்முதல் செய்து, நிறுவும் பணிகளும் நடைபெற்று வந்தன.

இப்போது ஓரிரு மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சப்பாத்தி தயாரிக்க ஒவ்வொரு மண்டலத்திலும் தனியாக இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட இடத்தில் சப்பாத்திகள் தயாரிக்கப்பட்டு, அம்மா உணவகங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

சப்பாத்திகளை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2,000 சப்பாத்திகள்: இப்போது முதல் கட்டமாக ஒவ்வொரு உணவகத்துக்கும் 2,000 சப்பாத்திகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மண்டலங்களிலும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அதன் பின்னர் விற்பனை தொடங்கும். இந்த பணிகள் இன்னும் 10 நாள்களில் முடிவடையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தமிழில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்

Print PDF

தினமணி           09.11.2013

தமிழில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்

சென்னையில் தமிழில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

சான்றிதழ் பெற்றோர் மற்றும் புதிதாக பெற விரும்புவோர்  இந்த புதிய திட்டத்தில், தங்கள் விருப்பப்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

 


Page 83 of 841