Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இலந்தைகுளத்தில் பொழுது போக்கு பூங்கா: உயர்நிலைக் குழு ஆய்வு

Print PDF

தினமணி 15.08.2009

இலந்தைகுளத்தில் பொழுது போக்கு பூங்கா: உயர்நிலைக் குழு ஆய்வு

திருநெல்வேலி, ஆக. 14: பாளையங்கோட்டை இலந்தைகுளத்தில் பொழுது போக்கு பூங்கா அமைப்பது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் உயர்நிலைக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.

பாளையங்கோட்டை இலந்தைக்குளத்தில் பொழுது பூங்கா அமைப்பது, நேரு சிறுவர் கலையரங்கில் பல்நோக்கு கலையரங்கு அமைப்பது என திருநெல்வேலி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி சென்னையில் தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டலாலினை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மண்டலத் தலைவர்கள் எஸ். விஸ்வநாதன், சுப. சீத்தாராமன், எஸ்.எஸ். முகம்மது மைதீன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அப்போது இந்த இரு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் அந்த இரு திட்டங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் துணைத் தலைவர் ஆர். காயத்ரி, ஆலோசகர் எஸ். விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

இக் குழுவினர் இலந்தைக்குளத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் நேரு சிறுவர் கலையரங்கையும் ஆய்வு செய்தனர்.

இலந்தைக்குளத்தில் சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்று அமைக்க திட்டமிட்டு வருவதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.

பின்னர் அந்த குழுவினர் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் அ.லெ. சுப்பிரமணியன், பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் சுப. சீதாராமன், ஆணையர் த. மோகன், மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவி ஆணையர் சுல்தானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கொடி நாள் வசூலில் சாதனை புரிந்த மாநகராட்சி ஆணையருக்கு நற்சான்று

Print PDF

தினமணி 14.08.2009

கொடி நாள் வசூலில் சாதனை புரிந்த மாநகராட்சி ஆணையருக்கு நற்சான்று

திருச்சி, ஆக. 12: முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் நலனுக்கான 2007-ம் ஆண்டு கொடி நாள் நிதி வசூலில் சாதனை புரிந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமிக்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு அரசு நிர்ணயம் செய்த இலக்கு ரூ. 6,81,000. ஆணையர் முனைப்புடன் செயல்பட்டு ரூ. 7,10,000 வசூலித்துள்ளார்.

இச்சான்றை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க. ராசப்பா, ஆணையரிடம் நேரில் வழங்கினார்.

 

குடிநீர் வழங்க நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர்

Print PDF
தினமணி 12.08.2009
குடிநீர் வழங்க நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர்

ஆம்பூர், ஆக. 11: ஆம்பூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் வாவூர் நசீர் அஹமத் தெரிவித்தார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

சாரங்கல் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆம்பூர் நகராட்சிக் கிணறுகள் வறண்டு போயுள்ளது. அவற்றை தூர்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. மேலும் ஒரு நாளைக்கு டிராக்டர்கள் மூலம் 80 லோடு தண்ணீர் ஆம்பூர் நகர மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருகின்ற 3 மாதத்திற்கு டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்த உடன் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 12 August 2009 04:06
 


Page 824 of 841