Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்ய 5 குழுக்கள்

Print PDF

தினமணி 01.08.2009

சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்ய 5 குழுக்கள்

திருப்பூர், ஜூலை 31: உச்ச நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து திருப்பூர் சாய்க்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்து அறிக்கைதாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரை சுற்றிய பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான சாயஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து, ஒரத்துப்பாளையம் அணையில் தேங்குவதால் சுற்றுவட்டார பகுதியில் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாய ஆலை களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், அதுவ ரை வெளியேறும் கழிவுநீருக்கு லிட்டருக்கு ஆறு காசுகள் வீதம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், சட்டப்பட்டறைகளுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது.

தற்போது திருப்பூர் பகுதியில் ரூ.800 கோடி மதிப்பில் 17 கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இப்போது சுத்திகரிப்பு நிலையங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சாயப்பட்ட றை உரிமையாளர்கள் கடந்த பல மாதமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கு கடந்த 27-ம் தேதி விசார ணைக்கு வந்தது. அப்போது, கட்டிமுடிக்கப்பட்டுள்ள பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என்று சாயப்பட்டறை சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், "சாயப்பட்டறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலை யங்களை ஆய்வு செய்து ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, திருப்பூர் சாயக்கழிவுநீர் பொது சுத்தி கரிப்பு நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ராமச்சந்திரன் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் தலா 3 பேர் இடம் பெற்றுள்ளனர். திங்கள்கிழமை ஆய்வுப்பணிகளை தொட ங்கும் இக்குழுவினருக்கு ஒருவாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக வாரிய திருப்பூர் மண்டல பொறியாளர் கண்ணன் தெரிவித்தார்.

 

ரூ. 1.6 கோடியில் பொலிவு பெறுகிறது கீழ்க்கட்டளை ஏரி

Print PDF

தினமணி 01.08.2009

ரூ. 1.6 கோடியில் பொலிவு பெறுகிறது கீழ்க்கட்டளை ஏரி



மத்திய அரசின் நிதி உதவியுடன் புதுப்பொலிவு பெற உள்ள கீழ்க்கட்டளை ஏரி.

ரூ. 1.6 கோடியில் பொலிவு பெறுகிறது கீழ்க்கட்டளை ஏரி


மத்திய அரசின் நிதி உதவியுடன் புதுப்பொலிவு பெற உள்ள கீழ்க்கட்டளை ஏரி.

சென்னை, ஜூலை 31: சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள கீழ்க்கட்டளை ஏரி ரூ. 1.6 கோடியில் புதுப் பொலிவு பெற உள்ளது.

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மடிப்பாக்கம் சந்திப்புக்கு முன்னர் அமைந்துள்ளது கீழ்க்கட்டளை ஏரி.

பல்லாவரம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை உள்வாங்கி சேமித்து அதன் பிறகு உபரியாகும் நீர் பள்ளிக்கரனைக்கு செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.

ரூ. 1.6 கோடி...: இந்த நிலையில், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எல்.சி.பி.) கீழ் தமிழகத்தில் கீழ்க்கட்டளை ஏரி உள்பட 3 ஏரிகளை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதற்கான திட்டத்தை ரூ. 1.6 கோடி மதிப்பீட்டில் தயாரித்துள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பில் 70 சதவீதத் தொகை மத்திய அரசிடம் இருந்தும், 20 சதவீதம் மாநில அரசிடம் இருந்தும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் பெறப்படும்.

முள்கம்பி வேலி...: இந்த திட்டத்தின்படி 56 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் கண்டறியப்பட்டு முள்கம்பி வேலி போடப்படும். இதனால் ஏரிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து மாசுப்படுத்துவது, ஆக்கிரமிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். மேலும், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியின் நடுவில் சிறிய அளவிலான தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிக்கான படகு போக்குவரத்து தொடங்கப்படும்.

கழிவுநீரை சுத்தப்படுத்த...: எரிமலைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை தாதுவை மண்ணுடன் கலந்து ஏரிக்குள் நீர் வரும் பகுதியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிக்குள் வரும் போதே கழிவுநீரை சுத்தப்படுத்த முடியும். ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதற்கான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை முகமைக்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அமைப்பு பரிசீலனை: மத்திய அரசின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பான இந்த முகமை மூலம் கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

இந்த திட்டத்துக்கு தனது பங்காக 10 சதவீதத் தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லாவரம் நகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் பங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல புறநகரில் உள்ள மற்ற ஏரிகளையும் சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சென்னை மாநகரில் போஸ்டர் ஒட்ட தடை

Print PDF

தினமலர் 31.07.2009

 


Page 827 of 841