Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அம்மா உணவகங்களில் இன்று காலை உணவுடன் இனிப்பு

Print PDF

தினமணி             01.11.2013

அம்மா உணவகங்களில் இன்று காலை உணவுடன் இனிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (நவம்பர் 2) அம்மா உணவகங்களில் காலை உணவுடன் இனிப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு சனிக்கிழமை சென்னை மாநகராட்சியில் உள்ள 200 அம்மா உணவகங்களும் வழக்கம் போல் செயல்படும். தீபாவளி பண்டிகையையொட்டி 200 அம்மா உணவகங்களிலும் காலை சிற்றுண்டி சாப்பிட வரும் பொதுமக்களுக்கு சிற்றுண்டியுடன் இனிப்பு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி         31.10.2013

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது. மேயர் சைதை துரைசாமி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாநகராட்சியின் இரண்டாண்டு சாதனைகள் பட்டியலிடப்படவுள்ளன.

மேலும் சென்னையில் டெங்கு நோய் பரவி வருவதாக செய்தி வெளியாகி வருவதால், இந்தப் பிரச்னையை மன்றக் கூட்டத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மன்றக்கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

‘200 ஆண்டுகள் பேசப்படும் 2 ஆண்டு சாதனைகள்’: மேயர் சைதை துரைசாமி நாளை பட்டியலிட்டு பேசுகிறார்

Print PDF

தினத்தந்தி             31.10.2013

‘200 ஆண்டுகள் பேசப்படும் 2 ஆண்டு சாதனைகள்’: மேயர் சைதை துரைசாமி நாளை பட்டியலிட்டு பேசுகிறார்

நாளை நடைபெறும் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 200 ஆண்டுகள் பேசும் சாதனைகள் எனும் தலைப்பில் மேயர் சைதை துரைசாமி பட்டியலிட்டு பேசுகிறார்.

நாளை மன்றக்கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் நாளை(வியாழக்கிழமை) காலை 9.30 மணி அளவில் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடக்கிறது. அ.தி.மு.க.சார்பில் சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்று கடந்த 25–ந்தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

அதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, ‘‘200 ஆண்டுகள் பேசும் 2 ஆண்டு சாதனை’’ எனும் தலைப்பில் மேயர் சைதை துரைசாமி பட்டியலிட்டு பேச உள்ளார்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் மேயர் சைதை விளக்கமளிக்கிறார்.

கொசுவலைகள் கொள்முதல்

சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை வழங்க உள்ளனர். இதனால் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் மன்றக்கூட்டம், நாளை அரை மணி நேரம் முன்னதாக 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய மன்றக்கூட்டத்தில், சென்னையில் நீர்நிலைகள் அருகில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்க 78 ஆயிரத்து 188 கொசுவலைகள் கொள்முதல் செய்வதற்காக ரூ.1 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து 600 நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும் மண்டலம் 8,9 மற்றும் 12 ஆகியவற்றில் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்பும் வெளியாகிறது. மாநகராட்சி பொன்விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்புகளும் வெளியிடபடலாம் என்று தெரிகிறது.

 


Page 88 of 841