Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திண்டுக்கல், தஞ்சை மாநகராட்சிகள் உருவாக்க சட்ட முன் வடிவு தாக்கல்

Print PDF
தினமலர்             29.10.2013

திண்டுக்கல், தஞ்சை மாநகராட்சிகள் உருவாக்க சட்ட முன் வடிவு தாக்கல்

சென்னை: திண்டுக்கல், தஞ்சை நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் சட்ட முன் வடிவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள் தொகை அதிகரித்தல், அதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், உள்ளாட்சி அமைப்பின் ஆண்டு வருமானம் அதிகரித்து வருதல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சை நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு, செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சிறப்பு சட்டம் உருவாக்க, சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு, சட்ட முன் வடிவில் கூறப்பட்டுள்ளது.
 

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகள் ஆகின்றன: சட்டசபையில் மசோதா தாக்கல்

Print PDF

தினத்தந்தி            29.10.2013

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகள் ஆகின்றன: சட்டசபையில் மசோதா தாக்கல்

திண்டுக்கல், தஞ்சாவூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. இதற்கான மசோதாக்கள் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இரு மசோதாக்கள்

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தார்.

அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஜெயலலிதா அறிவிப்பு

தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கலில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு வகை செய்யவேண்டிய பணிகளின் அளவீட்டினையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு, ‘‘தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்படும்’’ என்று, பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் மாற்றமைப்புகளுடன், ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு, இந்த சட்டமுன்வடிவு செயல்வடிவம் கொடுக்கவிழைகிறது.

இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளன.

செயல் வடிவம் பெறுகின்றன

தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி குறித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு மசோதாக்களும், இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகின்றன.

 

ஸ்மார்ட் கார்டு பணி நடக்கும் மையங்கள்

Print PDF

தினகரன்          25.10.2013

ஸ்மார்ட் கார்டு பணி நடக்கும் மையங்கள்

கோவை,: கோவை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை இப்பணி நடைபெறுகிறது. வார்டு வாரியாக புகைப்படம் எடுக்கும் மையங்கள் வருமாறு:

வார்டு 27:கவுமாரமடலாயம், சின்னவேடம்பட்டி.

வார்டு 28: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னமேட்டுப்பாளையம். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சரவணம்பட்டி.

வார்டு 29: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிவானந்தபுரம். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஜனதாநகர்.

வார்டு 30: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எல்.ஜி.பி.நகர்., ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஷாஜகான்நகர்.

வார்டு 31:அரசு உயர்நிலைப்பள்ளி, கார்த்திக் நகர்.

வார்டு 42: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உடையாம்பாளையம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னவேடம்பட்டி.

 


Page 92 of 841