Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆம்பூரில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் நகரசபை தலைவர் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி             25.10.2013

ஆம்பூரில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் நகரசபை தலைவர் வழங்கினார்

ஆம்பூர் நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் 60 பயனாளிகளுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி சி.எஸ்.சி. கணினி மையத்தில் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகரசபை தலைவர் சங்கீதாபாலசுப்பிரமணி கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஆணையாளர் (பொறுப்பு) எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர், மேலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமுதாய அமைப்பாளர் (பொறுப்பு) ஜேசுபால்மர் நன்றி கூறினார்.

 

கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து விளையாடிய மேயர்

Print PDF

தினத்தந்தி             25.10.2013

கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து விளையாடிய மேயர்

வேலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு ஆக்கி, மேஜைபந்து, இறகுபந்து, கைப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2–ம் நாளான நேற்று கைப்பந்து போட்டி தொடங்கியது. இதனை மேயர் கார்த்தியாயினி தொடங்கி வைத்தார். முன்னாள் கைப்பந்து, கூடைப்பந்து வீராங்கனையான அவர் அபாரமாக சர்வீஸ் போட்டு காண்பித்தம், பந்தை கைகளால் தடுத்து விளையாடியும் வீரர், வீராங்கனைகளையும், பார்வையாளர்களையும் கவர்ந்தார்.

விளையாட்டு போட்டிகள் வருகிற 26–ந்தேதிவரை நடைபெறும் என்றும், அன்றுமாலை வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி பால்சுதந்திர தாஸ் தெரிவித்தார்.

 

ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 219 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி             25.10.2013

ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 219 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

கோவை மாநகராட்சி ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆர்.சின்னச்சாமி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

விழாவில் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி கலந்து கொண்டு 219 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

விழாவில் கிழக்கு மண்டலக்குழுத் தலைவர் கே.ஆர்.ஜெயராமன், முதன்மைக் கல்வி அலுவலர் எ.ஞானகவுரி, மாநகராட்சி உதவி கமிஷனர் கார்த்திக், கவுன்சிலர்கள் முத்துசாமி, சேர்வராஜ் மாரப்பன், ராமசாமி, சால்ட் வெள்ளியங்கிரி, ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

 


Page 93 of 841