Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனை மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           24.10.2013

சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனை மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்

சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனையை ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விற்பனை

சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் சிறப்பு விற்பனை செய்யப்படும். ஈரோடு பஸ்நிலையத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் பட்டாசுகள் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சிந்தாமணியின் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.சி.பழனிசாமி முன்னிலை வகித்தார். விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கலந்துகொண்டு பட்டாசு சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சிந்தாமணி தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:–

ரூ.1½ கோடிக்கு இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் 13 சிந்தாமணி கிளைகள் உள்ளன. இதில் ஈரோடு பஸ்நிலையத்தில் உள்ள கிளையில் இன்று (நேற்று) தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு சம்பத்நகர், மூலப்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் வருகிற 25–ந் தேதியும் (நாளை),

மற்ற கடைகளில் வருகிற 28–ந் தேதியும் பட்டாசு சிறப்பு விற்பனைகள் தொடங்கப்பட உள்ளது.

இங்கு 500 வகையான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ரூ.185–ல் இருந்து ரூ.1,795 வரை உள்ள கிப்ட் பாக்ஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு சிந்தாமணி தலைவர் ஜெகதீசன் கூறினார்.

விழாவில் சிந்தாமணி மேலாண்மை இயக்குனர் யசோதாதேவி, ஈரோடு மாநகராட்சி மண்டல தலைவர்கள் மனோகரன், காஞ்சனாபழனிசாமி, கேசவமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்: 68 மனுக்கள் பெறப்பட்டன

Print PDF

தினகரன்         23.10.2013

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்: 68 மனுக்கள் பெறப்பட்டன

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 68 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாநகராட்சியில் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட் டம் நேற்று நடைபெற்றது. மேயர் ஜெயா தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்களுக்கு இடை யூறாக உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றவும், சாலை மேம்பாடு செய்யவும், பழுதடைந்த தெருவிளக்கு களை சீரமைக்கவும், கழிவறைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிக்க கோரியும் மனுக் கள் பெறப்பட்டன.

இதில் கோ.அபிஷேக புர கோட்டத்திற்கு உட் பட்ட 38, 39, 40, 41, 45 ஆகிய 5 வார்டுகளில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசின் ஆரம்ப சுகாதார மையம், மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண் டும். பொது குடிநீர் குழாய் இல்லாத பகுதிகளுக்கு வாரம் 3 முறையாவது லாரி கள் மூலம் குடிநீர் விநியோ கம் செய்யவேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அபிஷேகபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வேலுச்சாமி தலைமையில் மனு அளித்தனர்.

மனுக்களை பெற்ற மேயர் ஜெயா கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மாநகர பகுதியில் டெங்கு அறிகுறிகள் தெரியவந்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்ட உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக், நகர் நல அலுவலர் டாக்டர் அல்லி, செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஸ், உதவிஆணையர்கள் பாஸ் கர், பிரபுகுமார் ஜோசப், ரங்கராஜன், தயாநிதி கலந்து கொண்டனர்.

 

ஜெர்மன் மாணவர்கள் மேயருடன் சந்திப்பு

Print PDF

தினகரன்         23.10.2013

ஜெர்மன் மாணவர்கள் மேயருடன் சந்திப்பு

கோவை, : ஜெர்மன் நாட்டின் எஸ்லிங்கன் நகரில் உள்ள ஸோல்பெர்க் ரியல் ஸக்கில் பள்ளியும், கோவை ஜி.டி மெட்ரிக் பள்ளியும் இருநாட்டு கல்விமுறை மேம்பாடு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இருநாட்டு மாணவ, மாணவிகளும் தங்களுக்குள் கல்வி மேம்பாடு தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர். அதன்படி, ஜெர்மன் நாட்டின் பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 10 பேர் 21 நாள் பயணமாக கடந்த 12ம்தேதி கோவை வந்தனர். இவர்கள், வரும் 31ம்தேதி வரை கோவையில் தங்கியிருந்து ஜி.டி. பள்ளி கல்வி முறை பற்றி தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். இம்மாணவிகள் 10 பேரும், ஜி.டி பள்ளி மாணவிகள் 10 பேரும் நேற்று மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேயர் செ.ம.வேலுசாமி இவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

 


Page 94 of 841