Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குற்றாலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினத்தந்தி           19.09.2013

குற்றாலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

குற்றாலம் நகர பஞ்சாயத்து சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவி லதா அசோக்பாண்டியன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மெயின் பஜார் வழியாக முக்கிய வீதியில் வந்து பராசக்தி கல்லூரி முன்பு முடிவடைந்தது. செங்கோட்டை சாலை தங்கும் விடுதி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரணியில் குற்றாலம் பராசக்தி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி ஜீஜாபாய், கவுன்சிலர்கள் ஆனந்தி சுரேஷ், ஞானம், இசக்கி, பராசக்தி வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் வேலுசாமி, குற்றாலம் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அசோக்பாண்டியன் மற்றும் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 19 September 2013 07:27
 

சென்னை மாநகராட்சி உணவகத்தில் புதிய மூலிகை உணவு வகைகள்

Print PDF

மாலை மலர்              11.09.2013

சென்னை மாநகராட்சி உணவகத்தில் புதிய மூலிகை உணவு வகைகள்
 
சென்னை மாநகராட்சி உணவகத்தில் புதிய மூலிகை உணவு வகைகள்

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் மூலிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. மூலிகை சாப்பாடு, முடக்கத்தான் தோசை, கீரை வகை சாதங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மூலிகை உணவுகளுக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இதையொட்டி மேலும் சில மூலிகை உணவுகளை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்களை தடுக்கும் வகையில் மூலிகை ரசம், சூப் வகைகள், உணவு தானியங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன. வரகு, சாமை, குதிரைவாரி, தினை போன்ற அரிசி வகைளில் இட்லி, பொங்கள், உப்புமா புதிதாக விற்பனை செய்யப்படுகிறது.

மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகளை மாநகராட்சி விற்பனை செய்கிறது. வைரஸ் காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க கூடிய நிலவேம்பு கசாயம், ஆலாரை கசாயம் போன்றவை வழங்கப்படுகிறது. ஆலாரை கசாயம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

சுவாசமண்டலம், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை தடுக்க உதவும் தூதுவளை 'சூப்', உடல் பருமனை குறைக்கும் 'கொள்ளு' ரசம் ஆகியவற்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வயிறு, குடலில் உள்ள பூச்சிகளை அழித்து வாயு கோளாரை சரி செய்யக்கூடிய வேப்பம்பூ ரசமும் விற்கப்படுகிறது.

திணை பாயாசம், சாமை அரிசி, முறுக்கு, கேழ்வரகு சேவு, பச்சை பயிறு, பூந்தி போன்ற உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நொறுக்குத்தீனி வகைகளும் கிடைக்கின்றன.

இந்த புதிய வகை உணவு தயாரிப்பு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மற்றும் உணவகம் புணரமைப்பு பணிகளுக்காக கடந்த ஒரு வாரம் மூடப்பட்டு இருந்தது. பராமரிப்புக்கு பின்னர் மூலிகை உணவகம் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. புதிய வகை உணவுகளை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.

சூப் மற்றும் ரசம் வகைகள் உணவகத்தின் முன் பகுதியில் காலை முதல் மாலை வரை கிடைக்கும் அவற்றின் விலை ரூ.5 ஆகும்.

மழைக்காலத்திற்கு ஏற்ற உணவு, சூப், ரசம் போன்றவற்றை மாநகராட்சி சுகாதாரமான முறையில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இந்த உணவகத்தில் கூட்டம் அலை மோதுகிறது.

 

15-ந்தேதி முதல் அம்மா உணவகத்தில் ரூ.3-க்கு 2 சப்பாத்தி

Print PDF

தினபூமி               11.09.2013

15-ந்தேதி முதல் அம்மா உணவகத்தில் ரூ.3-க்கு 2 சப்பாத்தி

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Amma-Mess(C).jpg

சென்னை, செப். 11 - வருகிற 15-ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை தொடங்கப்படுகிறது. ஏழை எளிய நடுத்தர மக்கள் விலைவாசி பிடியில் விடுபட சென்னையில் அம்மா மலிவு விலை உணவகம்ா பிப்ரவரி மாதம் 19-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இட்லி தவிர பொங்கல்-சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின்போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை வாங்கி சாப்பிட தினமும் கூட்டம் அலை மோதுகிறது. சென்னைக்கு வேலை தேடி வருபவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர், ஏழை தாய்மார்கள் பலர் அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிடுகின்றனர்.

அம்மா உணவகங்களில் இனி மாலை நேரங்களில் சப்பாத்தியும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மே மாதம் 15-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

200 மலிவு விலை உணவகங்களிலும் மாலை நேரத்தில் 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி வருகிற 15-ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை தொடங்கப்படுகிறது.

சப்பாத்திக்கு மாவு பிசையும் மிஷின் ஒரு மண்டலத்துக்கு 1 வீதம் 15 மண்டலத்துக்கு ரூ.4 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1 கடைக்கு 2 ஆயிரம் சப்பாத்தி வீதம் 30 ஆயிரம் சப்பாத்தி 1 மண்டலத்திற்கு தயார் செய்யப்பட்டு 15 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.இதே போல் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் இருந்து 4 லட்சம் சப்பாத்தி தினமும் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படும்.

இதன் சோதனை ஓட்டம் நேற்று கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் செய்து பார்க்கப்பட்டது. அப்போது சப்பாத்தி மிகவும் அருமையாக வந்தது. பருப்பு கடைசலும் குருமாவும் நன்றாக இருந்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 15-ந்தேதி சப்பாத்தி வினியோகத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து 200 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் தினமும் மாலை நேரங்களில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி கிடைக்கும்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த அம்மா உணவகங்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ்ரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

 


Page 101 of 841