Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பேரூராட்சி வாகன ஓட்டுநருக்கு பரிசு

Print PDF

தினமணி        04.09.2013

பேரூராட்சி வாகன ஓட்டுநருக்கு பரிசு

விபத்தின்றி வாகனம் ஓட்டிய மாமல்லபுரம் பேரூராட்சி வாகன ஓட்டுநருக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கி கெüரவிக்கப்பட்டது.

 தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில், கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சி அலுவலக வாகனங்களை விபத்தின்றி ஓட்டிய ஓட்டுநர்களுக்கு  மாநில அரசு சார்பில் ரூ.500 ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மாமல்லபுரம் பேரூராட்சியில், நெம்மேலியைச் சேர்ந்த என்.டி. முருகன் , செயல் அலுவலரின் வாகன ஓட்டுநராக பணிபுரிகிறார். இவர், கடந்த 10 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் விபத்தின்றி வாகனம் ஓட்டியவர் என்ற பாராட்டை பெற்றுள்ளார்.

 அவரது சேவையை பாராட்டி தமிழக அரசின் சார்பில் பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை என்.டி.முருகனுக்கு வழங்கி கெüரவித்தார்.

 

நெல்லையில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

Print PDF

தினத்தந்தி             04.09.2013

நெல்லையில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

 

 

 

 

 

நெல்லை மாநகராட்சி 5, 6, 7, 39 ஆகிய வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் தேவி பேலஸ் மகாலில் இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நெல்லை துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன் முகாமை தொடங்கி வைத்தார். ஏராளமானவர்கள் அலுவலர்களிடம் மனு கொடுத்தனர்.

இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மனுக்கள் அளிக்கப்பட்டன. தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல தலைவர் மாதவன், கவுன்சிலர்கள் பரணி சங்கரலிங்கம், சிதம்பர ஜோதி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், ஜாகீர் உசேன், செய்யது அப்துல் காதர், வருவாய் அலுவலர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 04 September 2013 07:33
 

கோவை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.50 கட்டணத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனை கமிஷனர் லதா தகவல்

Print PDF

தினத்தந்தி              03.09.2013

கோவை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.50 கட்டணத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனை கமிஷனர் லதா தகவல்

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/pregnant.jpg

 

 

 

 

கோவையில் 9 மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.50 கட்டணத்தில் ‘ஸ்கேன்’ வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

கமிஷனர் ஆய்வு

கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில், மாநகராட்சி கமிஷனர் லதா தலைமையில் நேற்று மருத்துவ வசதி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கமிஷனர் லதா பேசும்போது கூறியதாவது:–

மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளை சேர்ந்த பொது மக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது மாநகராட்சி மருத்துவர்களின் முக்கிய பணியாகும். ஏழை பெண்களை அவர்களது கர்ப்பகாலத்தில் அலைய விடாமல் ஆரம்பம் முதல் கர்ப்பிணி பெண்கள் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கான பரிசோதனைகள் மற்றும் உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்க வேண்டும.

பிரசவ வசதி

ஏழை கர்ப்பிணி பெண்கள் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து கொள்வதற்கு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் ஓவ்வொரு நாளும் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் ஏழை மக்களிடத்தில் அன்பாக பேசி சிகிச்சை அளிக்க வேண்டும். ஓவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்கும் நேரம் அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் இருக்க வேண்டும். குடிசை பகுதிகளில் நடத்தப்டும் மருத்துவ முகாம்கள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் அங்குள்ளவர்களுக்கு மிகவும் பயனள்ள வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ரூ.50 கட்டணத்தில் ஸ்கேன்

மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை கர்ப்பிணி பெண்களின் வசதிக்காக 9 மருத்துவமனைகளில் ஸ்கேன் வசதி உள்ளது. இந்த மருத்துவமனைகளில் ஓவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் 50 ரூபாய் கட்டணத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை பார்க்கப்படும். சீதாலட்சுமி மருத்துவமனை, கணபதி, பீளமேடு, செல்வபுரம், உப்பிலிபாளையம் மற்றும் சிங்காநல்லூரில் உள்ள மருத்துவமனைகள் உள்பட 9 மாநகராட்சி மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த 9 மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 1737 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழை மக்களின் வசதிக்காக 6 மருத்துவமனைகளில் தொற்றா நோய் பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 30 வயதிற்கு மேற்பட்ட 5,702 பேருக்கு மேற்காணும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1,780 பெண்களுக்கு மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 43 நபர்களுக்கு மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. 89 பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் பிரசவம் பார்த்து கொள்ள தங்களது வீடுகளிலிருந்து மாநகராட்சி மருத்துவ மனைகளுக்கு செல்வதற்கு தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதியை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் சு.சிவராசு, நகர்நல அலுவலர் டாக்டர் பி. அருணா மற்றும் மாநகராட்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 103 of 841