Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி தொடக்கம்: 10–ந்தேதி வரை பொதுமக்களுக்கு வாய்ப்பு

Print PDF

மாலை மலர்            31.08.2013

ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி தொடக்கம்: 10–ந்தேதி வரை பொதுமக்களுக்கு வாய்ப்பு
 
ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி தொடக்கம்: 10–ந்தேதி வரை பொதுமக்களுக்கு வாய்ப்பு

சென்னை, ஆக. 31– ஆதார் அடையாள அட்டைக்கான புகைப் படம் எடுக்கும் பணி சென்னை மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டாக எடுக்கப்பட்டு வருகிறது. முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு பகுதியில் நேற்று முதல் புகைப்படம் எடுக்கும்பணி தொடங்கி உள்ளது.

முகப்பேர் 91–வது வார்டு பகுதியில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, பெண் பவுன்டேஷன் கட்டிடம், 1–வது, 2–வது, 3–வது, 7–வது பிளாக், ஊராட்சி பள்ளிகளில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

முகப்பேர் மேற்கு, கிழக்கு பகுதி பொதுமக்கள், யஷ்வந்த் நகர், முகப்பேர் ஏரித் திட்டம், ரெட்டிப்பாளையம் பகுதி மக்கள் அனைவரும் இங்கு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 5 வயது குழந்தை முதல் அனைவரும் புகைப்படம் எடுக்க தகுதியானவர்கள்.

இந்த முகாம் வருகிற 10–ந்தேதி வரை நடைபெறும் என்று கவுன்சிலர் பி.வி. தமிழ்ச்செல்வன் கூறினார்.

 

அம்மா உணவகத்தில் அடுத்த மாதம் சப்பாத்தி விற்பனை

Print PDF

தினபூமி               30.08.2013 

அம்மா உணவகத்தில் அடுத்த மாதம் சப்பாத்தி விற்பனை

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Amma-Mess(C).jpg 

சென்னை, ஆக 30 - சென்னை மாநகராட்சி சார்பில் 200 இடங்களில் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. தற்போது காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளை மட்டும் உணவு தயாரித்து விற்கப்படுகிறது. மாலையில் சப்பாத்தி விற்கவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தியை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் சப்பாத்தி, மற்றும் பருப்பு கடைசல் விற்க திட்டமிடப்பட்டது.

சப்பாத்தி அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்பதால் அதற்கான நவீன எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது. மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 சப்பாத்தி தயாரிக்கும் எந்திரங்கள், 15 பருப்பு கடைசல் தயாரிப்பு எந்திரங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டது.

செப்டம்பர் 15-ந்தேதி சப்பாத்தி விற்பனையை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டம் பார்ப்பதற்காக ஒரு சப்பாத்தி தயாரிப்பு எந்திரம், ஒரு பருப்பு கடைசல் எந்திரம் உடனடியாக வழங்க ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து விரைவில் நவீன எந்திரங்கள் அம்மா உணவகத்துக்கு வர உள்ளது. அந்த எந்திரத்தை முதல் கட்டமாக கோபாலபுரம் உணவகத்தில் பொறுத்தி சோதனை ஓட்டம் பார்க்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து உணவகங்களிலும் அடுத்த மாதம் சப்பாத்தி விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சேலம் மாநகராட்சியில் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Print PDF

தினத்தந்தி            30.08.2013

சேலம் மாநகராட்சியில் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

 

 

 

 

 

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் எஸ்.சவுண்டப்பன் தலைமையில் நடைபெற்றது. வார்டு எண் 54–ல் புதியதாக போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில் வீட்டு இணைப்பு வழங்கக்கோருதல், வார்டு எண் 50– ல் சாக்கடை கால்வாய் தூர்வார கோருதல், வார்டு எண் 45–ல் வரி நிலுவையை குறித்து கோருதல், ஆண்டிபட்டி பகுதி கான்கிரீட் சாலை, குடிநீர் வசதி மற்றும் போர்வெல் வசதி செய்து தர கோருதல், துப்புரவு பணியாளர் மீது புகார், குடும்ப ஓய்வூதிய பணப்பயன் வழங்க கோரல், வாரிசு வேலை வழங்க கோருதல், 2006–ல் பணியாற்றி நிறுத்தப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்க கோருதல் வேலைவாய்ப்பு மற்றும் துப்புரவு பணியாளராக பணி வழங்க கோருதல் உட்பட 11 கோரிக்கை மனுக்களை பொது மக்கள் மேயரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், செயற்பொறியாளர்கள் காமராஜ் அசோகன், வெங்கடேஷ், உதவி செயற்பொறியாளர்கள் எம்.ஆர்.சிபிச்சக்ரவர்த்தி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

 


Page 105 of 841