Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி            30.08.2013

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பெத்தநாயக்கன்பாளையம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் ஆர்.பி.ராமகிருஷ்னன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாதேஸ்வரன் வரவேற்றார். மழைநீர் சேகரிப்பு குறித்த வாசகங்களை மாணவ–மாணவிகள் ஏந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக சென்றார்கள். இதில் துணை தலைவர் சுகந்தி, வார்டு உறுப்பினர்கள் காஞ்சனா, அருணாசலம், சந்திரா, வெங்கடேஷ், சுப்பிரமணியன், பானுமதி, அண்ணாமலை, உமா, பெருமாயி,சீதாரமன், சத்தியசீலன்,ஜெயமணி மற்றும் அலுவலக பணியாளர்கள் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிகுழுவினர் கலந்து கொண்டார்கள்.
 

திருவள்ளூர் நகர வளர்ச்சிக் குழு தொடக்கம்

Print PDF

தினமணி            26.08.2013

திருவள்ளூர் நகர வளர்ச்சிக் குழு தொடக்கம்

திருவள்ளூர் நகர வளர்ச்சிக் குழுவின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூர் நகரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நகர வளர்ச்சிக் குழு அமைக்க வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், குழுவுக்குத் தேவையான அனைத்து வடிவங்களும் நிறைவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நகர வளர்ச்சிக் குழு தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் பி.வி.ரமணா தலைமை வகித்து குழுவிற்கு முதல் நிதியாக ரூ.10 லட்சத்தை அமைச்சர் வழங்கினார்.

இக்குழுவிற்கு ஆண்டுச் சந்தாவாக ரூ.1,000, உறுப்பினர் புதுப்பிப்புக் கட்டணமாக ரூ. 200 என நிர்ணயம் செய்யப்பட்டது.

மொத்தமாக ஆண்டுச் சந்தா கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது.

குழுவில் பங்கேற்ற ஏராளமானோர் ஆண்டுச் சந்தா ரூ.10 ஆயிரத்தை வழங்கினர்.

மேலும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை நிதி வழங்கினர்.

குழுவின் பணிகள்

இக்குழுவின் மூலம் நகரில் உள்ள சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும்.

மேலும் நகருக்கு தேவையான வசதிகள் குறித்து பொதுமக்களின் ஆலோசனைகளும் ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

இந்த திட்டம் நகரில் சீராக நடைமுறைப்படுத்தப்பட்டால், தொடர்ந்து ஒன்றிய அளவிலும் இதுபோன்ற வளர்ச்சிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.

திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன், நகராட்சி ஆணையர் அட்சயா, நகராட்சிப் பொறியாளர் பாபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக, அம்மா ராவல் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் திருவள்ளூர் நகராட்சிக்கு குளிர்சாதன சவப்பெட்டியுடன் கூடிய வாகனத்தை அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார்.

 

பள்ளிகொண்டாவில் 318 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி            26.08.2013

பள்ளிகொண்டாவில் 318 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

 
 
 
 
 
 
 
 
பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் பி.ஜி.சுப்பிரமணி, அ.தி.மு.க நகர செயலாளர் எம்.உமாபதி, துணை தலைவர் நாகராணி, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட அவைத் தலைவர் டி.கே.முருகேசன், ஒன்றியக்குழு துணை தலைவர் சேரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுகாதார துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு 318 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், துரைராஜ், விஸ்வநாதன், கிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 26 August 2013 05:52
 


Page 106 of 841