Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வடவள்ளி, தெலுங்குபாளையத்தில் அம்மா திட்ட முகாம்

Print PDF

தினத்தந்தி            26.08.2013

வடவள்ளி, தெலுங்குபாளையத்தில் அம்மா திட்ட முகாம்


 
 
 
 
 
 
 
வடவள்ளி, தெலுங்குபாளையத்தில் மாநகராட்சி சார்பில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

அம்மா திட்ட முகாம்

கோவை மாநகராட்சி சார்பில் அம்மா திட்ட முகாம் வடவள்ளியில் நடந்தது. முகாமுக்கு மேற்கு மண்டல தலைவர் சாவித்திரி பார்த்திபன் தலைமை தாங்கினார். மலரவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி பொதுமக்களுக்கு புதிய சொத்துவரி புத்தகத்தை வழங்கினார்.

3 நாட்கள் நடந்த இந்த முகாமில் சொத்துவரி புத்தகத்தில் பெயர் திருத்தம், பட்டா மாறுதல், குடும்ப அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ் போன்றவற்றை பயனாளிகள் உடனடியாக பெற்று சென்றனர். நிகழ்ச்சியில் வன குழு தலைவர் பார்த்திபன், கவுன்சிலர்கள், நகரசெயலாளர் முருகேசன், அவைத்தலைவர் துரைராஜேந்திரன், பார்த்திபன், டி.பி.சேரலாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெலுங்குபாளையம்

இதேபோல் தெலுங்குபாளையத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 21–வது வார்டு 76, 77, 78, 79, 86–வது வார்டு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான சொத்துவரி புத்தகத்தில் பெயர் திருத்தம், பட்டா மாறுதல், குடும்ப அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ் போன்றவற்றை பயனாளிகளுக்கு எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சியில் மலரவன் எம்.எல்.ஏ., ஆவின் சேர்மன் ப.வெ.தாமோதரன், மண்டல தலைவர் பெருமாள்சாமி, கவுன்சிலர்கள், உள்பட கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 26 August 2013 05:37
 

விற்பனை குறைந்ததால் அம்மா உணவகங்களில் 100 பேருக்கான உணவு தயாரிப்பு குறைப்பு

Print PDF

தினகரன்            24.08.2013

விற்பனை குறைந்ததால் அம்மா உணவகங்களில் 100 பேருக்கான உணவு தயாரிப்பு குறைப்பு

மதுரை: அம்மா உணவகங்களில் 100 பேருக்கான உணவு தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது. விற்பனை இல்லாததாலும், நிதி பற்றாக்குறையாலும் மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரையில் அம்மா திட்ட மலிவு விலை உணவகங்கள் மேலவாசல், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், ஆனையூர், புதூர், காந்திபுரம், ராமவர்மா நகர், ராமராயர் மண்டபம், சி.எம்ஆர்.ரோடு ஆகிய 10 இடங்களில் உள்ளன. இந்த உணவகங்களில் தினமும் காலை 7 முதல் 10 மணி வரை இட்லி ஒன்றுக்கு ரூ.1 வீதமும், மதியம் 12 முதல் 3 மணி வரை ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 மாத ஆய்வில் 7 உணவகங்களில் தயாரிக்கப்பட்ட இட்லி மற்றும் உணவு விற்பனையாகி விடுகின்றன என்பது தெரிந்தது.

காந்திபுரம், பழங்காநத்தம், சிஎம்ஆர் ரோடு ஆகிய 3 இடங்களிலுள்ள தயாரிக்கப்படும் உணவு முழுமையாக விற்பனை இல்லை. இதனால் மிஞ்சியதை வேறு உணவகங்களுக்கு அனுப்பி விற்கும் நிலை உள்ளது. மாநகராட்சி கணக்கின்படி அடக்க விலை ஒரு இட்லிக்கு ரூ.3.64, சாம்பார் சாதம் ரூ.14.73 தயிர் சாதம் ரூ.7.44. ஆனால் இட்லி ரூ.1 சாம்பார் சாதம் ரூ.5 தயிர் சாதம் ரூ.3 என விற்கப்படுகிறது. இதன்படி ஒரு இட்லிக்கு ரூ.2.64 சாம்பார் சாதத்திற்கு ரூ.9.73 தயிர் சாதத்திற்கு ரூ.4.44 பற்றாக்குறை ஏற்படுகிறது.

 ஒரு உணவகத்திற்கு ஒருநாள் பற்றாக்குறை ரூ.7,419 வீதம் 10 உணவகங்களுக்கு ரூ.74 ஆயிரத்து 190 ஆகிறது. இது மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவிடப்படுகிறது. தவிர இந்த உணவகங்கள் அமைக்க மொத்தம் ரூ.2.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. உணவு விற்பனையில் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் மாநகராட்சி நிதி ஒதுக்க வேண்டும். இன்னும் அரசு மானியம் வராததால் மாநகராட்சி நிதியே செலவிடப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் காந்திபுரம், பழங்காநத்தம், சிஎம்ஆர் ரோடு ஆகிய உணவகத்தில் சரிவர விற்பனை இல்லை. மாநகராட்சியின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்த உணவகங்களில் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 100 பேருக்கான உணவு அளவை குறைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த உணவகங்களில் 300 பேருக்கான உணவு தற்போது 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது போன்று விற்பனை ஆகாத மற்ற உணகங்களிலும் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவக பணியாளர்களுக்கு கடந்த ஜூலை மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடியால் சம்பளம் போடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பணியாளர்கள் தவிக்கின்றனர்.

 

முதலிடம் பெற கடுமையாக உழைப்போம்

Print PDF

தினமணி             23.08.2013

முதலிடம் பெற கடுமையாக உழைப்போம்

போடி நகராட்சி, தமிழகத்தில் முதலிடம் பெற்று முன்னோடி நகராட்சியாக மாறுவதற்கு கடுமையாக உழைப்போம் என, அதன் நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் உறுதி கூறினார்.

   தமிழகத்தில் இரண்டாவது சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்ட போடி நகராட்சிக்கு, சுதந்திர தினத்தில் முதல்வர் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டுக் கூட்டம் மற்றும் சிறந்த நகராட்சியாக உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா தலைமை வகித்தார். பொறியாளர் ஆர். திருமலைவாசன், மேலாளர் (பொறுப்பு) முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

  இதில், நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் கூறுகையில், போடி நகராட்சியில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரூ. 80 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. தற்போது, 2ஆவது சிறந்த நகராட்சி என விருது பெற்ற பின், மக்களுக்கு சேவை செய்வதில் தொய்வு காட்டாமல், கடுமையாக உழைப்பதன் மூலம் முதலிடம் பெற முயற்சிப்போம் என்றார்.

   கூட்டத்தில், சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வர்த்தகர் சங்கம், உணவு விடுதி உரிமையாளர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

 


Page 107 of 841