Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்–டாப் மேயர் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி               22.08.2013

காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்–டாப் மேயர் வழங்கினார்

 
 
 
 
 
 
 
 
காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலை பள்ளியில் 144 மாணவ–மாணவிகளுக்கு அரசின் விலையில்லா லேப்–டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் வரவேற்றார்.

மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 144 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கிருபானந்த வாரியார் தம்பி மகன் புகழனார், வட்டார கல்விக்குழு உறுப்பினர் கோரந்தாங்கல் குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பி.நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவப்பிரகாசம், மாநகராட்சி கவுன்சிலர் இளவரசி ஏழுமலை, நிர்வாகிகள் திலகம், தா.ச.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முனிசாமி நன்றி கூறினார்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்              21.08.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் கல்லூரி மாணவர்கள்,நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணியை நகர்மன்றத் தலைவர்(பொ) அப்துல் ரகுமான் துவக்கி வைத்தார். கமிஷனர்(பொ) சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ராமதாஸ், கண்ணன், தியாராஜன், மோகன், அய்யப்பன், உட்பட பலர் பங்கேற்றனர்.

பேரணியின் போது நகரின் முக்கிய வீதிகள் சாலைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.

 

திருச்சி மாநகராட்சி குறைதீர் கூட்டம்

Print PDF

தினமலர்              21.08.2013

திருச்சி மாநகராட்சி குறைதீர் கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாதந்தோறும் நடப்பது வழக்கம். இதில், அடிப்படை பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் மனு அளிப்பர். இம்மனுக்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பர்.

மாநகராட்சியின் இம்மாத குறைதீர் கூட்டம், நேற்று (19 ம் தேதி), மேயர் ஜெயா முன்னிலையில், நடந்தது. இதில், துணை மேயர் மரியம் ஆசிக், மாநகராட்சி கமிஷ்னர் தண்டபாணி, நகர பொறியாளர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாலை மேம்பாடு, தெருவிளக்கு பழுதுபார்த்தல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளுக்கான, 18 மனுக்கள் பெறப்பட்டன.

"பொதுமக்களின் மனுக்களை, உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மேயர் வலியுறுத்தினார்.

 


Page 110 of 841