Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

Print PDF

தினமலர்              21.08.2013

மாநகராட்சியில் நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு


திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மேயர் ஜெயா தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக் மீரா, பொன்மலை கோட்டத் தலைவர் மனோகரன், கவுன்சிலர் ஹேமா, செயற்பொறியாளர் நாகேஷ், நகர் நல அலுவலர் அல்லி, உதவி கமிஷனர்கள் பிரபுகுமார், உதயசூரியன் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க உறுதி மொழி ஏற்றனர்.

 

நம்பியூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம்

Print PDF

தினத்தந்தி              21.08.2013

நம்பியூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம்

நம்பியூர் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நம்பியூர் பஸ்நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் கமலம்நம்பிமணி தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் சாந்திவரதராஜன், செயல்அதிகாரி மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது சுகாதாரம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள் நல்லகுமார், கதிர்வேல், சிவகாமிஅர்ஜூனன், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஒரு வாரத்தில் பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தல்: கர்நாடக அமைச்சர்

Print PDF

தினமணி               20.08.2013

ஒரு வாரத்தில் பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தல்:  கர்நாடக அமைச்சர்


இன்னும் ஒரு வாரத்தில் பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநிலப் போக்குவரத்து மற்றும் பெங்களூர் மாநகரப் பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

 பெங்களூரு - ஒசூர் சாலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை சார்பில், ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த பெண் பூஜா, சதீஷ் ஆகியோருக்கு அரசு சார்பில் திங்கள்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
 இதில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 ஆதரவற்றோர்களுக்கு அரசு இதுபோல திருமணம் நடத்தி வைத்து, அவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதால், ஆதரவற்றவர்களை திருமணம் செய்து கொள்ள பலரும் முன்வருவார்கள். ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தங்களுக்கு யாருமில்லை என்ற குறையும் நீங்கும்.

 ஆதரவற்ற பெண்கள், ஆண்களை திருமணம் செய்து கொள்ள முன்வருபவர்களுக்கு அரசு தேவையான உதவியை வழங்கும் என்றார் அவர்.

 மேலும், மக்களவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சித்தராமையா ஈடுப்பட்டிருந்ததால், பெங்களூர் மாநகர மேயர் தேர்தலுக்கான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை.

 திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை அந்த ஆவணத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது.

 இதையடுத்து, இன்னும் ஒரு வாரத்தில் பெங்களூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கானத் தேர்தல்  நடைபெறும் என்றார் அவர்.

 


Page 111 of 841