Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி தேர்வு: மேயர்

Print PDF

தினபூமி               20.08.2013

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி தேர்வு: மேயர்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Saidai-Duraisamy1_0.jpg

சென்னை, ஆக.20 - தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் முதன் முறையாக அகில இந்திய மற்றும் மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படுகின்றன.சென்னை மாநகரில் படித்த பட்டதாரி இளைடர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி பல துறைகளைச் சார்ந்த உயர்கல்வியையும் ((C.­­­A., ICWA.,   விற்கான நுழைவு தேர்வுகள் மற்றும்  M.B.B.S., B.E.,  தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெறும் அரசு/தனியார் ( IT  நிறுவனங்கள்) போட்டித் தேர்வுகள்) மற்றும் அனைத்துப் போட்டித் தேர்வுகள் (UPSC/TNPSC/TRB/TNUSRB)   தேர்வுகள் மற்றும் அகில இந்திய/மாநில அளவிலான பல வேலைவாய்ப்புகளுக்கான, உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள்) எழுதிடவும் அப்பகுதியில் பட்டம் பெற்ற இளைடர்கள் மற்றும் மாணவர்களின் தேவைக்கேற்பவும், பள்ளிகளில் இட வசதிக்கேற்ப  சென்னை மாநகராட்சி, போட்டித் தேர்விற்கான பயிற்சியினை தனியார் நிறுவனங்களை சார்ந்த சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கட்டணமில்லாமல் பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில் படித்து முடித்து விட்டு, வேலை தேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் தங்களுடைய வீட்டின் அருகாமையிலுள்ள மாநகராட்சி  பள்ளிகளில் பயிற்சி பெறலாம். இருபால் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக வகுப்புகள் நடத்தப்படும். மேலும் படிப்பதற்கு  தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேலும் பயிற்சி பெறுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு பாடக்குறிப்புகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும். 

இப்பயிற்சியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளம்  மூலம்  பதிவு கொள்ளலாம். www.chennaicorporation.gov.in. போட்டித் தேர்வுகளில் படிக்க,  வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து தங்கி படிக்க விரும்பும் மாணவ, மாணவியர்களும் சென்னை மாநகராட்சியின்  இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் பதிவு செய்ய முடியாவதர்கள் தபால் மூலம் தங்களது விண்ணப்பங்களை (மேயர் அலுவலகம், ரிப்பன் மாளிகை, சென்னை மாநகராட்சி, சென்னை-3.) என்ற முகவரிக்கு அனுப்பலாம். 

சென்னை மாநகராட்சியில் 9 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான அடிப்படை பயிற்சியும் வழங்கப்படும். 

இப்பயிற்சியில் பங்குகொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் 10.09.2013-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இத்தகவலை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.

 

போட்டித் தேர்வுகளுக்கான மாநகராட்சியின் இலவச பயிற்சி வகுப்பு

Print PDF

தினமணி                20.08.2013

போட்டித் தேர்வுகளுக்கான மாநகராட்சியின் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் கட்டணமில்லாமல் வழங்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை பெற விரும்புபவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வையும், தனியார் மற்றும் அரசு நடத்தும் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளையும் (யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி.) எழுத கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

அனைத்து வார்டுகளில் உள்ள இளைஞர்களும் அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் பயிற்சி பெறலாம். இருபாலருக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பாடக்குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கி படிக்க விரும்பும் மாணவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்கள் தபால் மூலம் - வணக்கத்துக்குரிய மேயர் அலுவலகம், ரிப்பன் மாளிகை, சென்னை மாநகராட்சி, சென்னை - 3 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான அடிப்படை பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிறந்த மாநகராட்சியாக ஈரோடு தேர்வு அரசுக்கு அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு நன்றி

Print PDF

தினகரன்                19.08.2013

சிறந்த மாநகராட்சியாக ஈரோடு தேர்வு அரசுக்கு அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு நன்றி

ஈரோடு, : தமிழக அளவில் ஈரோடு மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்து சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் ஈரோடு மேயர் மல்லிகாபரமசிவத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசு கேடயம் வழங்கினார். இதைதொடர்ந்து ஈரோடு வந்த மேயர் மல்லிகாபரமசிவத்தை ஈரோடு மாநகராட்சி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் ஆறுமுகம், விஜயகுமார், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், சண்முகவடிவு, ரவிச்சந்திரன், ஆறுமுகம், கவுரி மற்றும் அனைத்து அலுவலர் மற்றும் பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். துணைமேயர் பழனிசாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

பின்னர் ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார், பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சிறந்த மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சியை தேர்வு செய்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எங்களது கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 


Page 112 of 841