Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சோளிங்கர் அரசினர் மேல்நிலை பள்ளியில் 388 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி பேரூராட்சி மன்ற தலைவர் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி                17.08.2013

சோளிங்கர் அரசினர் மேல்நிலை பள்ளியில் 388 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி பேரூராட்சி மன்ற தலைவர் வழங்கினார்

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Free-Computer.jpg

சோளிங்கரில் உள்ள எத்திராஜம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் என்.விசாகமூர்த்தி தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் ராமு, பேரூராட்சி உறுப்பினர்கள் சீனிவாசன், மணிகண்டன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பார்த்திபன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.எல்.விஜயன், ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் ஏ.எல்.சாமி ஆகியோர் கலந்து கொண்டு 388 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினர். விழாவில் ஏ.எல்.சாமி குடும்பத்தினர் சார்பில் ஆண்டுதோறும் 6 முதல் 12–ம் வகுப்பு வரை தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு வழங்கப்படும் கேடயம் வழங்கப்பட்டது.

விழாவில் மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.எல்.விஜயன் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.

இதில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமை ஆசிரியர் எஸ்.ராகவன் நன்றி கூறினார்.

 

திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா: மாணவர்களுக்கு மரக்கன்றுகள்

Print PDF

தினத்தந்தி                17.08.2013

திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா: மாணவர்களுக்கு மரக்கன்றுகள்


 
 
 
 
 
 
 
 
திருப்பூர் மாநகராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் மாணவர் களுக்கு மரக்கன்றுகளை மேயர் ஏ.விசாலாட்சி வழங்கினார்.

சுதந்திர தின விழா

திருப்பூர் மாநகராட்சி அலு வலகத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட் டது. அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மேயர் ஏ.விசாலாட்சி மாலை அணி வித்து மரியாதை செலுத்தி, தேசிய கொடியை ஏற்றி வைத் தார்.

விழாவில் கமிஷனர் செல்வ ராஜ், துணை மேயர் குணசேக ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண் டனர்.

இதைத்தொடர்ந்து ஜெய்வா பாய் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, வி.ஏ.டி. டிரஸ்ட் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி கள் நடந்தது. பின்னர் நடத் திட்ட உதவிகளையும், மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளையும், மாநக ராட்சி பணியாளர்களுக்கு தனியார் கண் மருத்துவ மனையில் பரிசோதனை செய் யும் பதிவு அட்டையை யும் மேயர் ஏ.விசாலாட்சி வழங்கி னார்.

அதன்பிறகு பேண்டு வாத்தி யங்கள் முழங்க ஊர்வலமாக சென்று குமரன் நினைவுத் தூண், குமரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம்

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழா வில் ஒன்றிய தலைவர் சாமி நாதன் தேசிய கொடியை ஏற்றி னார். ஆணையாளர் கே.ஜி.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல் போலீஸ் நிலை யங்கள், தீயணைப்பு நிலையங் கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பொதுமக் களுக்கு இனிப்பு வழங்கப்பட் டது.

பொது விருந்து

சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் நேற்று மதியம் பொது விருந்து நடந்தது. துணை மேயர் குண சேகரன் பொதுவிருந்தில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் செயல் அதிகாரி (பொறுப்பு) நந்தகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் சடையப் பன், மயூரிநாதன், லோகு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி                17.08.2013

மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மேச்சேரி பேரூராட்சியில் பள்ளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்துக்கு மேச்சேரி பேரூராட்சி தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணன், செயல்அலுவலர் சண்முகம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நங்கவள்ளி பேரூராட்சியில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். துணைதலைவர் ரவி, செயல் அலுவலர் கந்தசாமி, கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணை தலைவா மீனாட்சி, செயல் அலுவலர் மாதையன் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.

 


Page 115 of 841