Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் சுதந்திர தின விழா:மேயர் தேசியக் கொடி ஏற்றினார்

Print PDF

தினமணி              16.08.2013

மாநகராட்சியில் சுதந்திர தின விழா:மேயர் தேசியக் கொடி ஏற்றினார்

மதுரை மாநகராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தேசியக் கொடி ஏற்றினார்.

  மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தேசியக் கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மதுரையில் கடந்த ஆண்டில் ரூ.139.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுóத்தி வருகின்றன.

  நடப்பாண்டில் பிளாஸ்டிக் சாலைகள், உள்வட்ட சுற்றுச் சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பு,  பள்ளிக் கட்டடங்கள், குழந்தைகள் ஊட்டச் சத்துணவு மையக் கட்டடம்,  மணடல அலுவலகக் கட்டடங்கள் என பல்வேறு புதிய திட்டஙகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.287.52 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேறகொள்ளப்படுகின்றன. 

  மேலும், அவனியாபுரத்தில் ரூ.9.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட உள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், மழைநீர் வடிகால் வசதி, பாதாளச் சாக்கடை வசதிகள்  போன்ற புதிய திட்டங்கள் அரசு ஒப்புதலுடன் நிறைவேற்றத் திட்டமிடப்படுள்ளது என்றார்.

 நிகழ்ச்சியில், அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கும் சிறந்த ஆசிரியரகளுக்கும் மேயர் பரிசுகளை வழங்கினார். பிறகு மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  விழாவில், ஆணையர் ஆர். நநதகோபால், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன. துணை ஆணையர் (பொறுப்பு) சின்னம்மாள், நகரப் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், மண்டலத் தலைவர்கள் ராஜபாண்டியன், ஜெயவேல், சாலைமுத்து, மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகராஜ், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் நீ.சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: மேயர் சசிகலாபுஷ்பா தேசிய கொடியேற்றினார்

Print PDF

தினத்தந்தி              16.08.2013

தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: மேயர் சசிகலாபுஷ்பா தேசிய கொடியேற்றினார்

 

 

 

 

 

தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினவிழா  கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் எல்.சசிகலாபுஷ்பா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் சேவியர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சுதந்திரதின விழா மேயர் சைதை துரைசாமி தேசிய கொடி ஏற்றினார்

Print PDF

தினத்தந்தி              16.08.2013

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சுதந்திரதின விழா மேயர் சைதை துரைசாமி தேசிய கொடி ஏற்றினார்

 

 

 

 

 

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில்  சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து பள்ளி மாணவ–மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவ–மாணவிகளுக்கும், அணிவகுப்பில் கலந்து கொண்ட தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கும், பள்ளி சாரண–சாரணியர்களுக்கும் மேயர் சைதை துரைசாமி பரிசுகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, சுவர்ண ஜெயந்தி நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வீதம், 6 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். மேலும் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 34 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை மேயர் பா.பெஞ்சமின் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 118 of 841