Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தாரமங்கலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி              13.08.2013

தாரமங்கலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தாரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தனபால், உறுப்பினர்கள் சீனி, பிரபு, ஜோதிமணி மற்றும் மீசை கோவிந்தராஜ், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், மழைநீர் உயிர்நீர், மழைநீரை சேகரிப்போம்–நீர்வளம் காப்போம் போன்ற வாசங்களை மாணவர்கள் கையில் ஏந்தியபடி கொண்டு சென்றனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் உமாகாந்த் செய்திருந்தார.

 

துடியலூர், கவுண்டம்பாளைத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி              13.08.2013

துடியலூர், கவுண்டம்பாளைத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்

துடியலூர், கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாமை மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்.

மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம்

கோவையை அடுத்த துடியலூர், கவுண்டம்பாளையத்தில் கோவை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்மா திட்ட முகாமின் தொடக்க விழா வார்டு அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி கவுன்சிலர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லதா திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். முன்னதாக முகாமை தொடங்கி வைத்து மேயர் சே.ம.வேலுசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஆணைக்கிணங்க இந்த திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்து. இந்த திட்டமானது நேரடியாக மக்களை சென்று அடைய கூடியது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குறைகளை அவர்களே நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து அப்போதே அதற்கு தீர்வு காணமுடியும். அவ்வாறு தீர்வு காண முடியாத குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி பொதுமக்கள் கூறவேண்டும்.

4 நாட்கள் நடைபெறும்

இந்த முகாம் கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும். மற்ற வார்டுகளிலும் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் தொடர்ச்சியாக நடைபெறும். பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ, துணை மேயர் லீலாவதி உண்ணி, மாநகராட்சி உறுப்பினர்கள் கே.எஸ்.மகேஸ்குமார், சின்னசாமி, மாரிமுத்து, சரஸ்வதி கவிச்சந்திரமோகன், வனிதாமணி, வத்சலா, அன்னபூரணி மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 13 August 2013 06:54
 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்               12.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தொட்டியம், :  தொட்டியம் பேரூ ராட்சி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொட்டியம் பேரூராட்சித்தலைவர் தமிழ்ச்செல்வி திருஞானம் பேரணிக்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஐயப் பன், செயல் அலுவலர் சித்ரா, முன் னாள் அறங்காவலர் குழுத் தலைவர் திரு ஞானம், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் கவியரசன், உதவி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சின்னச்சாமி வரவேற்றார்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி முக் கிய வீதிகள் வழியாக மீண் டும் பள்ளி மைதான த்தை வந்தடைந்தது. பேரூராட்சி அலுவலர் சம் பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 120 of 841