Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழை நீர் சேகரிப்புவிழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               06.08.2013

மழை நீர் சேகரிப்புவிழிப்புணர்வுப் பேரணி

சிங்கம்புணரியில் பேரூராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

  பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணிக்கு தலைவர் லெட்சுமிபிரியா ஜெயந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் மருது முன்னிலை வகித்தார்.

    பேரணியில் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். மேலும் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து கோஷமிட்டனர்.

  பேரணி பெரிய கடை வீதி, அரசு மருத்துவமனை, சுந்தரம் நகர், திண்டுக்கல் சாலை  வழியாக பேரூராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது.   இதில் பேரூராட்சி துணைத் தலைவர் தொல்காப்பியன், கவுன்சிலர்கள் சதீஷ்குமார், குணசேகரன், நித்தியா, ரேவதி மணிவண்ணன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

650 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் மேயர் கார்த்தியாயினி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி                06.08.2013 

650 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் மேயர் கார்த்தியாயினி வழங்கினார்

 
 
 
 
 
 
 
 
 
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைபள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகளுக்கு அரசின் விலையில்லா லேப்–டாப் வழங்கும் விழா அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் செல்வராணி, ஆனந்தநாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் எஸ்.ஆர்.கே. அப்பு முன்னிலை வகித்தார்.

வட்டார கல்விக்குழு உறுப்பினர் கோரந்தாங்கல் ஏ.குமார் வரவேற்றார். 650 அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி அரசின் விலையில்லா லேப்–டாப்களை வழங்கி பேசினார். முடிவில் ஆசிரியர் க.ராஜா நன்றி கூறினார்.

 

அம்மா திட்டம் மூலம் 250 பேருக்கு உதவித்தொகை மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி                06.08.2013 

அம்மா திட்டம் மூலம் 250 பேருக்கு உதவித்தொகை மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்

 

 

 

 

 

ஈரோடு மாநகராட்சி 3–வது மண்டலத்துக்கு உள்பட்ட சூரம்பட்டிவலசு பகுதியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு ஈரோடு தாசில்தார் சுசீலா தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, மண்டல தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கலந்து கொண்டு 250 பேருக்கு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கினார்.முன்னதாக சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஈரோடு வழங்கல் தாசில்தார் ஆறுமுகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமரேசன், துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன், கவுன்சிலர் எம்.பி.சுப்பிரமணி, அ.தி.மு.க. நகர மகளிர் அணி செயலாளர் பானுசபியா, பாப்பாத்தி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கேட்டு மனுக்கள் கொடுத்தனர்.
 


Page 126 of 841