Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

செம்பாக்கம் நகராட்சியில் இலவச சித்த மருத்துவமனை தொடக்கம்

Print PDF

தினமணி              05.08.2013

செம்பாக்கம் நகராட்சியில் இலவச சித்த மருத்துவமனை தொடக்கம்

தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இலவச சித்த மருத்துவமனை தொடக்கப்பட்டுள்ளது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயக்குநர் கே.மாணிக்கவாசகம் இலவச சித்த மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசியது:

தாம்பரம் சானடோரியத்தில் செயல்பட்டுவரும் தேசிய சித்த மருத்துவமனைக்கு வார நாள்களில் சராசரியாக 1500 நோயாளிகளும், ஞாயிற்றுக்கிழமை 2 ஆயிரம் நோயாளிகளும் வருகின்றனர்.

சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அனைத்து வசதிகளும் உண்டு. அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவையும் அளிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அருகில் உள்ள செம்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இலவச சித்த மருத்துவ முகாம்கள் மூலம் எங்களது சேவையை விரிவுபடுத்தி உள்ளோம். வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த உரிய அனுமதி பெற வேண்டும்.

செம்பாக்கம் நகராட்சியுடன் இணைந்து தொடங்கப்பட்டு இருக்கும் இலவச சித்த மருத்துவமனையில் சனிக்கிழமைதோறும் காலை 10.30 முதல் 12.30 வரை இலவச சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். இப்பகுதி மக்கள் இலவச சிகிச்சை பெற இடவசதி அளித்துள்ள செம்பாக்கம் நகராட்சி நிர்வாகம் பாராட்டுக்குரியது என்றார்.

செம்பாக்கம் நகர்மன்றத் தலைவர் எம்.சாந்தகுமார், ஆணையர் சிவசுப்ரமணியன், நகரமன்ற உறுப்பினர் கோ.சத்யநாராயணன், தேசிய சித்த மருத்துவ நிறுவனப் பேராசிரியர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி              05.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ராமசேகர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

ஆற்காடு ஸ்ரீமகாலஷ்மி மகளிர் செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இதில் கல்லூரி முதல்வர் வனிதாதேவி, மருத்துவ அலுவலர் டாக்டர் ஷர்மி, சுகாதார ஆய்வாளர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தூத்துக்குடி மாநகராட்சி 51 முதல் 60 வார்டுக்கான திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் பெரியசாமி அறிக்கை

Print PDF

தினகரன்              05.08.2013

தூத்துக்குடி மாநகராட்சி 51 முதல் 60 வார்டுக்கான திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் பெரியசாமி அறிக்கை

தூத்துக்குடி,: தூத்துக்குடி மாநகராட்சியில் 51 முதல் 60 வார்டுகளுக்கான திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலா ளர் என். பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக் குடி மாவட்டத்தில் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அளவில் இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார்.

 தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளுக்கும் இளைஞரணி நிர்வாகிகள் வார்டு வாரியாக ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். முதல்கட்டமாக 51 முதல் 60 வார்டுகள் வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

51வது வார்டு இளைஞ ரணி தலைவராக அய்யாத்துரை, செயலாளராக அரிராம், பொருளாளராக பாண்டித்துரை, துணை செயலாளராக காந்திராஜ், பிரதிநிதியாக மாரியப்பன், 52வது வார்டு தலைவராக பிரகாஷ், செயலாளராக சுந்தர், பொருளாளராக அஜீஸ், துணை செயலாளராக நெப்போலியன், பிரதிநிதியாக ஜூடுபிரசாந்த், 53வது வார்டு தலைவராக மிய்யாக்கனி, செயலாளராக சேதுபதி, பொருளாளராக முத்துப்பாண்டி, துணை செயலாளராக சிவக்குமார், பிரதிநிதியாக கனிராஜ், 54வது வார்டு தலைவராக லோகேஸ்அரவிந்தன், செயலாளராக முத்துராமலிங்கம், பொருளாளராக ராஜ்குமார், துணை செயலாளராக ரமேஷ், பிரதிநிதியாக சரபன்ராம்நாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

55வது வார்டு தலைவராக குமரே சன், செயலாள ராக ஆனந்தகுமார், துணை செயலாள ராக திருமுருகன், பொருளாளராக காமராஜ், பிரதிநிதியாக சசிகுமார், 56வது வார்டு தலைவராக ஆத்திக்குமார், செயலாள ராக முருகேசன், துணை செயலாளராக ரூபன், பொருளாளராக பாஸ்கர், பிரதிநிதி யாக விஜயபாண்டியன், 57வது வார்டு தலைவராக சேசுபாலன், செயலாளராக அருண்குமார், பொருளாளராக வெற்றிவேல், துணை செயலாளராக யோவான், பிரதிநிதியாக ஆனந்த் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

58வது வார்டு தலைவ ராக முருகேசன், செயலாள ராக திவான் ராஜசேகர், பொருளாளராக உலக நாதன், துணை செயலாள ராக பொன் ராஜேஷ் குமார், பிரதிநிதியாக கிருபாகரன், 59வது வார்டு தலைவராக முத்துராஜ், செயலாளராக ஜேசுபாலன், பொருளாளராக சந்தனராஜ், துணை செயலாளராக ராஜபெரு மாள், பிரதிநிதியாக அருண்குமார், 60வது வார்டு தலைவராக எம்.ஆத்திராஜ், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக அருண்குமார், துணை செயலாளராக மாரியப்பன், பிரதிநிதியாக ராம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


Page 127 of 841