Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி

Print PDF

தினகரன்              01.08.2013

மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மேயர் மல்லிகாபரவசிவம், துணை மேயர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, காஞ்சனா பழனிச்சாமி, முனியப்பன் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்து தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெற்று தந்த முதல்வருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வது, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தார்சாலைகள் சீரமைப்பதற்கு தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு சேவை நிதிநிறுவனம் மூலம் ரூ.10.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாமன்ற அரங்குடன் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகை என பெயர் சூட்ட அனுமதி அளித்த முதல்வருக்கு மாநகராட்சி மன்றம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பண்ருட்டி நகரமன்ற கூட்டம்

Print PDF

தினமலர்              01.08.2013

பண்ருட்டி நகரமன்ற கூட்டம்

பண்ருட்டி:கும்பகோணம் சாலையில் உள்ள தடுப்புக் கட்டையை சீரமைக்க வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.

பண்ருட்டி நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கமிஷனர் உமா மகேஸ்வரி, துணைச் சேர்மன் மல்லிகா, பொறியாளர் ராதா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

வடிவேலன் (அ.தி.மு.க.,): கும்பகோணம் சாலையில் விபத்து ஏற்பட்ட தடுப்புக் கட்டையை சீரமைக்க வேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

ராஜதுரை (அ.தி.மு.க.,): காந்தி ரோட்டில் ரத்தினம் பிள்ளை மார்க்கெட் எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு சைக்கிள் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

ராமகிருஷ்ணன் (தி.மு.க.,): காந்தி ரோட்டில் உள்ள வியாபாரிகள் கடந்த 25 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதிப்பில்லாமல் செய்ய வேண்டும்.

சேர்மன்: மார்க்கெட் எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சர்வேயர் மூலம் அளந்து சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கப்படும்.

கமலக்கண்ணன் (அ.தி.மு.க.,): வடகைலாசம் பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்திராகாந்தி சாலையில் சாக்கடை பள்ளம் முடப்படவில்லை. இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.

 

பிக்கட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி               01.08.2013 

பிக்கட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

பிக்கட்டி பேரூராட்சி மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் மன்ற அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் ஜெயமணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் (பொ) ந.மணிகண்டன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார்.

 கூட்டத்தில் பிறப்பு-இறப்பு பதிவுகள், வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 அப்போது சிவசக்தி நகர், அணிக்காடு, கவுண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பிரச்னைகள் நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், இவற்றை உடனடியாக செய்து முடிக்க வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

 கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஜெயமணி உறுதியளித்தார்.

 


Page 130 of 841