Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆதார் அடையாள அட்டை போட்டோ எடுக்கும் இடங்கள்

Print PDF

தினகரன்                31.07.2013

ஆதார் அடையாள அட்டை போட்டோ எடுக்கும் இடங்கள்

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலம் வாரியாக ஸ்மார்ட் கார்டுக்கான (ஆதார் அடையாள அட்டை) புகைப்படம் மற்றும் கை விரல் ரேகை, கருவிழி போன்ற உடற்கூறு உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக புகைப்படம் எடுக்கப்படும் இடங்கள் விவரம் வருமாறு: 1 ம் தேதி(நாளை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புகைப்படம் எடுக்கும் வார்டு, இடம்:

வார்டு                         இடம்

37 வது வார்டு    மாநகராட்சி ஆரம்ப பள்ளி, பால ரங்கநாதபுரம்.
                          ராமன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி, பீளமேடு
56 வது வார்டு    மாநகராட்சி ஆரம்ப பள்ளி, பீளமேடுபுதூர்
                          நேசனல் மாடல் மெட்ரிக் பள்ளி, பீளமேடு
57 வது வார்டு    மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளி பாளையம்
                          தியாகி என்ஜிஆர் மேல்நிலைப்பள்ளி, வரதராஜபுரம்
58 வது வார்டு    காந்தி நினைவு நூற்றாண்டு பள்ளி, வரதராஜபுரம்
                          மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நீலிகோணம்பாளயம்
59 வது வார்டு    மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எச்ஐஎச்எஸ் காலனி
                         பிஎஸ்ஜி கன்யா குருகுலம் மேல்நிலைப்பள்ளி, பீளமேடு
60 வது வா£ர்டு  மாநகராட்சி துவக்க பள்ளி. ஒண்டிப்புதூர் , வடக்கு
                          மாநகராட்சி துவக்க பள்ளி. ஒண்டிப்புதூர் , தெற்கு
76 வது வார்டு    மாநகராட்சி நகர் நல மையம் தெலுங்கு பாளையம்
                          மாநகராட்சி ஆரம்ப பள்ளி, தெற்கு செல்வபுரம்
77 வது வார்டு    மாநகராட்சி ஆரம்ப பள்ளி, சொக்கம்புதூர்
                          மாநகராட்சி ஆரம்ப பள்ளி, வடக்கு செல்வபுரம்
78 வது வார்டு    மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம்.
13 வது வார்டு    மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
14 வது வார்டு    மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி , கோவில்மேடு
15 வது வார்டு    மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்புதூர்.

 

திமிரி பேரூராட்சியில் கைத்தறி நெசவாளர் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

Print PDF

தினத்தந்தி           31.07.2013

திமிரி பேரூராட்சியில் கைத்தறி நெசவாளர் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

திமிரி பேரூராட்சியில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் கைத்தறி நெசவாளர்கள் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி தலைமை தாங்கி பேசினார். திமிரி பேரூராட்சி தலைவர் எம்.புவனேஸ்வரி, துணைத்தலைவர் டி.ஆர்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நெசவாளர்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் முக்கிய கோரிக்கைகளான சங்கம் அமைத்தல், கடன் உதவி வழங்குதல், நெசவாளர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு சலுகைகள், நலிந்த நெசவாளர் குடும்பத்திற்கு வீடு என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதைத்தொடர்ந்து நெசவாளர்களிடம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் நெசவாளர்களின் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொழில் மேம்பட வழிவகை செய்யப்படும் என தெரிவித்து பேசினார். கூட்டத்தில் நெசவாளர்கள் உள்பட பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

டேக்வாண்டோ போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் மேயர் விஜிலா சத்யானந்த் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி           31.07.2013

டேக்வாண்டோ போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் மேயர் விஜிலா சத்யானந்த் வழங்கினார்

நெல்லை மாவட்ட சூப்பர் டேக்வாண்டோ கழகம் சார்பில் 5–வது மாவட்ட சாம்பியன் கோப்பைக்கான போட்டி நெல்லையில் நடந்தது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். 285 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் 42 புள்ளிகளை பெற்று விக்கிரமசிங்கபுரம், பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 35 புள்ளிகள் பெற்று இப்பள்ளி பெண்கள் பிரிவிலும் ஒட்டு மொத்த சாம்பியன் ஆனது.

பரிசளிப்பு விழாவில் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ்நாடு டேக்வாண்டோ கழக பொதுச்செயலாளர் பி.செல்வமணி, நெல்லை மாவட்ட சூப்பர் டேக்வாண்டோ கழக தலைவர் பி.திருமலைமுருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 132 of 841