Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி

Print PDF
தினமலர்       30.07.2013

ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி


மதுரை:வீட்டுவசதிவாரியம் ரூ. 1.58 கோடி செலுத்தியதால், ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ., காலனி, டீன்ஸ் குடியிருப்பு பகுதிகளை, மதுரை மாநகராட்சி பராமரிக்க எடுத்துக் கொண்டது.

இப்பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இதில், பெரும்பாலும் அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். வீட்டுவசதி வாரியம் பராமரிப்பில் இருந்த இவ்வீடுகள், மோசமான நிலையில் இருப்பதுடன், ரோடு, தெருவிளக்கு, சாக்கடை, குப்பை, குடிநீர், பாதுகாப்பு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

அடிப்படை வசதியை சரிசெய்யும்படி மனுகொடுத்தால், வீட்டுவசதி வாரியமும், மாநகராட்சியும், "இது எங்கள் பொறுப்பில் இல்லை' எனக்கூறி, தட்டிக் கழித்துவிடுகின்றன. இதனால் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை.

இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, மாநகராட்சிக்கு இந்தப் பகுதிகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

கட்டடங்கள் அளவு அடிப்படையில் ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 71 ஆயிரத்து 200ஐ, வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சாலமன்ஜெயகுமார், மாநகராட்சிக்கு வழங்கினார். இதையடுத்து, இப் பகுதிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தன. இனி இப்பகுதிகளின் அடிப்படை வசதிகளை மாநகராட்சியே பராமரிக்கும்.
 

மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் தென்­கொ­ரியா செல்ல அனு­மதி

Print PDF
தினமலர்                  30.07.2013

மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் தென்­கொ­ரியா செல்ல அனு­மதி

சென்னை:தென்­கொ­ரி­யாவில் நடை­பெறும், சர்­வ­தேச மாநாட்டில் கலந்து கொள்ள, சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் இரு­வ­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி மேயர், கமி­ஷனர், சமீ­பத்தில், அமெ­ரிக்­காவில் உள்ள சான் அந்­தோ­ணியா நக­ருக்கு பயணம் மேற்­கொண்­டனர். அடுத்த கட்­ட­மாக மாந­க­ராட்சி பொறி­யா­ளர்கள், சி.எம்.டி.ஏ., பொறி­யா­ளர்கள் சிங்­கப்பூர், சீனா, ஹாங்காங் நாட்டிற்கு பயணம் மேற்­கொண்­டுள்­ளனர்.

இந்த நிலையில், கொரிய அரசின் அங்­கீ­காரம் பெற்ற ஆராய்ச்சி நிறு­வ­ன­மான, 'தி கொரியா டிரான்ஸ்போர்ட் இன்ஸ்­டி­டியூட்' ஏழு நாட்­க­ளுக்கு, சர்­வ­தேச மாநாட்டை, அந்த நாட்டின் தலை­நகர் சியோலில் நடத்­து­கி­றது. வரும் அக்., 13ம் தேதி முதல், 19ம் தேதி வரை இந்த மாநாடு நடக்­கி­றது. இந்த மாநாட்டில், சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் இருவர் கலந்து கொள்ள மாந­க­ராட்சி அனு­மதி வழங்கி உள்­ளது.

அதன்­படி, தலைமை பொறி­யாளர் லெஸ்லி ஜோசப் சுரேஷ்­குமார், பேருந்து சாலைகள் துறையின் மேற்­பார்வை பொறி­யாளர் புக­ழேந்தி ஆகியோர், சியோல் செல்ல, உள்­ளனர்.

இதுகுறித்து, மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறு­கையில், 'சென்னை மாந­க­ராட்­சியில் உலக தரத்தில் சாலை அமைக்கும் திட்டம் உள்­ளது. கொரி­யாவில் நடை­பெறும் மாநாடு சாலை சம்­பந்­த­மா­னது. இதனால், சென்னை மாந­கராட்‌சி பொறி­யா­ளர்கள் இதில் கலந்து கொள்­வது அவசி­ய­மா­னது.

இதற்­கான செலவு முழு­வதும் மத்­திய நகர்ப்­புற வளர்ச்சி துறை அமைச்­சகம் ஏற்கும்,' என்றார்.
 

சென்னை புறநகரில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினத்தந்தி         30.07.2013 

சென்னை புறநகரில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல மெட்ரோ குடிநீர் வாரியத்தின் சார்பில் 161–வது வட்டத்தில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பள்ளி மாணவ–மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மழைநீர் சேகரிக்க வேண்டிய அவசியத்தை பற்றி விளக்கிய பதாகைகளை எடுத்து சென்றனர்.

பேரணியை மண்டல குழு தலைவர் வி.என்.பி.வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். இதில் மெட்ரோ தென் மேற்கு மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன், பகுதி பொறியாளர் அஞ்சநேயலு, உதவி பொறியாளர் கிருஷ்ணன்முர்த்தி, கவுன்சிலர் ஆலந்தூர் வேம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி 15–வது மண்டலத்திற்குட்பட்ட 194–வது வட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி கவுன்சிலர் பாஸ்கரன் தொடங்கி வைத்தா£ர். இதில் மெட்ரோ வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 133 of 841