Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி தனி குடிநீர் திட்டப்பணி மத்திய அமைச்சருடன் மேயர் கமிஷனர் இன்று சந்திப்பு

Print PDF
தினகரன்        19.07.2013

மாநகராட்சி தனி குடிநீர் திட்டப்பணி மத்திய அமைச்சருடன் மேயர் கமிஷனர் இன்று சந்திப்பு


சேலம்: சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டப்பணி தொடர்பாக டெல்லியில் இன்று மத்திய அமைச்சரை மேயர், கமிஷனர் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர்.

சேலம் மாநகராட்சிக்கு தனி குடிநீர் திட்டப்பணிகள் ரூ.320 கோடியில் நடந்து வருகிறது. மேட்டூரில் இருந்து சேலத்திற்கு வரும் வழியில் குரங்குச்சாவடியில் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குழாய் பதிக்க இன்னும் அனுமதி கிடைக்காததால் பணிகள் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் பணிகளை விரைந்து முடிக்க டெல்லிக்கு சேலம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் குழுவினர் சென்றனர். நேற்று அங்கு டெல்லியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அதிகாரிகளை சந்தித்து குடிநீர் குழாய் பதிக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். அதில், குரங்குச்சாவடியில் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2.19 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இன்று (19ம் தேதி) அந்த குழுவினர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகின்றனர்.
 

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நாடகம்

Print PDF

தினமணி                   19.07.2013

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நாடகம்

அவல்பூந்துறை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, நாடகம், கலைநிகழ்ச்சி, பேரணி, இலக்கியப் போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

 அவல்பூந்துறை பாவடித் திடலில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார்.

 சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ கிட்டுசாமி கலந்துகொண்டு மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நாடகத்தைத் தொடங்கிவைத்தார்.

 விழாவில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கணபதி, கூட்டுறவு வங்கித் தலைவர்கள் குருமூர்த்தி, பூவை தமிழன், பேரூராட்சி துணைத் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 சென்னை ஜெயபால் நாடக சபா கலைக்குழுவினர் மழைநீர் சேமிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் ஆபத்து, குடிநீர் சேமிப்பு குறித்து நாடகம் மூலம் விளக்கினர்.
 

பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம்:மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு பாராட்டு

Print PDF

தினமணி                   19.07.2013

பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம்:மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு பாராட்டு

அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கான பாராட்டு விழா ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.

   மாநில மாநகராட்சி ஊழியர்களின் கூட்டமைப்புத் தலைவர் ச.நா.சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் தலைவர் த.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

   பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த ஆ.நித்யா, சு.சத்யன், எஸ்.சங்கர நாராயணன் ஆகியோருக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் நகராட்சி ஊழியர்கள் மாநில கூட்டமைப்புத் தலைவர் எஸ்.குமரிமன்னன், மாநகராட்சி பொறியாளர் கே.ஆறுமுகம், பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 135 of 841