Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்

Print PDF

தினமணி              17.07.2013

பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்

பெங்களூர் மாநகராட்சியில் வருவாய்த் துறையில் பணிபுரிந்த 420 அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பெங்களூர் ஏரோஹள்ளி துணை மண்டலத்தில் அதிகாரிகள் செய்த முறைகேடுகளால் பெங்களூர் மாநகராட்சிக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இதனால், வேறு துறைகளிலிருந்து மாநகராட்சி வருவாய் துறைக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் 420 பேரை ஆணையர் லட்சுமி நாராயணா ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 மாநகராட்சி வரலாற்றில் இது போன்று ஒரே நாளில் 420 பேரை பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளது முதல் முறை என கூறப்படுகிறது. இதனால், மாநகராட்சியில் மற்ற துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

பேரூராட்சி அலுவலகம் திறப்பு

Print PDF

தினமணி              17.07.2013

பேரூராட்சி அலுவலகம் திறப்பு

பெருந்துறை அருகே ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கருமாண்டிசெல்லிப்பாளையம் பேரூராட்சியின் புதிய அலுவலகத்தை வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.   

பின்னர் அவர் பேசியது:   தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருவாய்த் துறை சார்பில் நடைபெறும் "அம்மா' திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது என்று, மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பெருந்துறை, சத்தியமங்கலத்தில் போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

   இதைத்தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் 79 பேருக்கு ரூ.9 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குநர் கலைவாணன் வரவேற்றார்.

   பேரூராட்சித் தலைவர் ஜானகி குப்புசாமி, பெருந்துறை தொகுதி அதிமுக செயலாளர் திங்களூர் கந்தசாமி, பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

"அம்மா' உணவகங்களில் 5 லட்சம் இட்லிகள் விற்பனை

Print PDF

தினமணி              17.07.2013

"அம்மா' உணவகங்களில் 5 லட்சம் இட்லிகள் விற்பனை

கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் உள்ள "அம்மா' உணவகங்களில் இதுவரை 5 லட்சம் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

  கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் "அம்மா' உணவகங்கள் கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்டது. இங்கு காலையில் இட்லியும் மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதம் வழங்கப்படுகிறது.

 உணவகம் துவங்கப்பட்ட நாள்முதல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) வரை 10 உணவகங்களிலும் 5.02 லட்சம் இட்லிகளும், 2.54 லட்சம் சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

 "அம்மா' உணவகங்களில் சுகாதாரம், வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை மாநகர நல அலுவலர், உதவி மாநகர நல அலுவலர் மற்றும் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பதாக மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.

 


Page 136 of 841