Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

4 புதிய பேரூராட்சி அலுவலகங்கள் திறப்பு

Print PDF

தினகரன்            12.07.2013

4 புதிய பேரூராட்சி அலுவலகங்கள் திறப்பு

ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் ரூ.85 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 பேரூராட்சி அலுவலகங்கள் வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காஞ்சிக்கோவில், கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, பெரியகொடிவேரி ஆகிய 4 பேரூராட்சி அலுவலகங்களின் கட்டிடங்கள் பழுதடைந்தும், இடநெருக்கடியிலும் இருந்து வந்தது. இதையடுத்து புதிய அலுவலகங்கள் கட்டிக்கொடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, காஞ்சிக்கோவில், கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி ஆகிய இடங்களில் தலா ரூ.20 லட்சம் செலவிலும், பெரியகொடிவேரியில் ரூ.25 லட்சம் செலவிலும் மொத்தம் 4 பேரூராட்சிளில் ரூ.85 லட்சம் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டன. இப்பேரூராட்சி அலுவலகங்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் தோப்புவெங்கடாசலம் வருகின்ற 14ம் தேதி திறந்து வைக்கிறார். இவ்விழாவிற்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்குகிறார்.

 

ஆத்தூர் நகராட்சி அவசர கூட்டம்

Print PDF
தினகரன்            12.07.2013

ஆத்தூர் நகராட்சி அவசர கூட்டம்


ஆத்தூர்: ஆத்தூர் நகரமன்ற அவசர கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தந்தை பெரியார் நகர மன்ற கூடத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து நகரமன்ற தலைவர் உமாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (12ம் தேதி) நகரமன்ற அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நகர வளர்ச்சிக்கு என கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
 

அரசு மருத்­து­வ­ம­னை­களில் 'அம்மா' உண­வகம் விரைவில் துவங்க ஏற்­பா­டுகள் தீவிரம்

Print PDF

தினமலர்              12.07.2013

அரசு மருத்­து­வ­ம­னை­களில் 'அம்மா' உண­வகம் விரைவில் துவங்க ஏற்­பா­டுகள் தீவிரம்

சென்னை:சென்னை அரசு பொது மருத்­து­வ­மனை உட்பட ஆறு அரசு மருத்­து­வ­மனை வளா­கங்­களில் மலிவு விலை உண­வகம் துவங்க மாந­க­ராட்சி சுகாதார துறை­யினர் தீவிரமாக ஏற்பா­டுகள் செய்து வருகின்­றனர்.
விரைவில் துவக்கம்.

சென்­னையில் தற்போது 200 மலிவு விலை உண­வ­கங்கள் செயல்­படுகின்­றன. அவை தவிர, ஆயி­ரக்­கணக்­கான நோயா­ளிகள் வந்து செல்லும் ராஜிவ்­காந்தி அரசு பொது மருத்­து­வ­ம­னையில் உண­வகம் அமைக்க, கட்­டு­மான பணிகள் நடந்து வருகின்­றன.

இன்னும் ஒரு வாரத்தில் அந்த பணிகள் முடிந்து, முதல்வர் உண­வகத்தை துவக்கி வைப்பார் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதை தவிர, கீழ்ப்­பாக்கம் அரசு மருத்­து­வ­மனை, ராயப்­பேட்டை அரசு மருத்­து­வ­மனை, ஸ்டான்லி மருத்­துவ கல்லுாரி மருத்­து­வ­மனை, எழும்பூர் மகப்­பேறு மருத்­து­வ­மனை, எழும்பூர் குழந்­தைகள் நல மருத்­து­வ­மனை ஆகிய ஐந்து இடங்­களில் மலிவு விலை உண­வகம் துவங்க மாந­க­ராட்சி சுகா­தார துறை முடிவு செய்­துள்­ளது.
இதற்­காக அந்த ஐந்து மருத்­து­வ­மனை நிர்­வா­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது. ஐந்து மருத்­து­வ­ம­னை­க­ளிலும், மாந­க­ராட்சி சுகா­தார துறை­யினர் ஆய்வு நடத்­தினர்.

அதில், உண­வ­கத்­திற்கு புதிய கட்­டடம் கட்ட இடம் தேர்வு செய்­யப்­பட்டுள்­ளது.

விரைவில் கட்­டு­மான பணிகள் துவங்க அனைத்து ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்டு வரு­கின்­றன என, அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

மறு ஒப்பந்தம்


சென்­னையில் கூடு­த­லாக 200 இடங்­களில் மலிவு விலை உண­வ­கங்கள் திறக்க மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.
இதற்­காக ஒவ்­வொரு வார்­டிலும், காலி­யாக உள்ள மாந­க­ராட்­சிக்கு சொந்­த­மான இடங்­களில் உண­வ­கத்­திற்கு புதிய கட்டடம் கட்ட ஒப்­பந்தம் கோரப்­பட்டு வரு­கி­றது.

கட்­டு­மான பணி­களில் லாபம் இல்லை என்­பதால், அந்த பணி­களை எடுத்து செய்­வதில் பல இடங்­களில் ஒப்­பந்­த­தா­ரர்கள் முன் வர­வில்லை. இதனால் உண­வக கட்­டு­மான பணி­க­ளுக்கு மறு­ஒப்­பந்தம் கோரப்­பட்டு வரு­கி­றது.

இதுகுறித்து அதி­காரி ஒரு­வ­ரிடம் கேட்­ட­போது, 'கட்ட­டங்கள் தயாரான பிறகு தான் கூடுதல் உண­வ­கங்கள் திறக்­கப்­படும். சென்­னையில் ஆயிரம் மலிவு விலை உண­வ­கங்கள் அமைக்க வேண்டும் என்­பது மாந­க­ராட்­சியின் இலக்கு. கூடு­த­லாக 200 உண­வ­கங்கள் விரைவில் அமையும்' என்றார்.

கவுன்­சி­லர்கள் தலை­யீடு

சென்­னையில் இயங்கி வரும் மலிவு விலை உணவகங்­களின் செயல்­பா­டுகள் குறித்து ஒவ்­வொரு பகுதியிலும் உளவு துறை போலீசார் விசா­ரித்து, அறிக்கை தயா­ரித்­துள்­ளனர்.

உண­வ­கங்கள் துவங்­கப்­பட்ட போது இருந்த வரவேற்பு, தற்­போதும் உள்­ளதா என்று அறிய இந்த அறிக்­கையை அரசு கேட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

பெரும்­பா­லான இடங்­களில் உண­வ­கத்­திற்கு வரவேற்பு அதி­க­ரித்து வரு­வ­தா­கவே அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக உளவு துறை அதி­காரி ஒருவர் கூறினார்.

அதே நேரம், சில உண­வ­கங்­களில் உள்ள நிர்­வாக பிரச்­னைகள், கவுன்­சி­லர்கள் தலை­யீடு குறித்தும் அறிக்கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார்.

இந்த அறிக்கை முதல்­வரின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட இருக்­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 


Page 138 of 841