Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி

Print PDF

தினமணி             12.07.2013

குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி

குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 11) பாதுகாப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில், பணியின்போது பாதுகாப்பாக செயல்படுவது மற்றும் விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிóயாற்றும் 120-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளித்தனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினமணி             11.07.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் பொ.சங்கர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

 இப்பேரணியில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊரிசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 500-க்கும் மேற்பட்டோர் மழைநீர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை தாங்கி பங்கேற்றனர்.

 முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. பேரணியில் மழைநீர் கட்டமைப்பு மாதிரி வடிவத்துடன் கூடிய மினி லாரி இடம்பெற்றது. அத்துடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

 மாநகர மேயர் பி.கார்த்தியாயினி, பொறியாளர் தேவகுமார், நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன், மண்டலக்குழு தலைவர் எஸ்.குமார், நகரமைப்புக் குழுத் தலைவர் அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF
தினகரன்      11.07.2013    

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து மாணவ,  மாணவிகள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதன் துவக்க நிகழ்ச்சியில் கமிஷ்னர் ஆணையர் மதுமதி முன்னிலை வகித்தார். மேயர் சசிகலாபுஸ்பா தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மழை நீரை சேமிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷம் எழுப்பி சென்றனர். மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

இதில் துணை மேயர் சேவியர், மண்டல தலைவர் கோகிலா, கவுன்சிலர்கள் வீரபாகு, சந்திரா மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் தூத்துக்குடியில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட கல்வி நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.  

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்தணக்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
 


Page 140 of 841