Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரசு பொது மருத்துவமனையில் "அம்மா' உணவகம் 15 நாள்களில் திறக்கப்படும்: மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமணி             11.07.2013

அரசு பொது மருத்துவமனையில் "அம்மா' உணவகம் 15 நாள்களில் திறக்கப்படும்: மாநகராட்சி அதிகாரிகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் "அம்மா' உணவகம் 15 நாள்களில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மலிவு விலை "அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி, பொங்கல், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் மாலை வேளையில் சப்பாத்தி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையில், மருத்துவமனைகளில் "அம்மா' உணவகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15 நாள்களில் உணவகம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: "அம்மா' உணவகங்களுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உணவகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனையடுத்து "அம்மா' உணவகம் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டது.

கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும் 15 நாள்களில் உணவகம் திறக்கப்படும்.

மேலும் சென்னையில் உள்ள ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், குழந்தைகள் மற்றும் தாய், சேய் நல மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள் திறக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் "அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

"மாணவர்களுக்கு மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தேவை

Print PDF

தினமணி              10.07.2013

"மாணவர்களுக்கு மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தேவை

மாணவர்களிடையே மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எம். பழனியம்மாள் தெரிவித்தார்.

அரூரை அடுத்துள்ள செக்காம்பட்டி பி.டி.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா, அதன் தலைவர் இரா.தமிழ்மணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவில், சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எம்.பழனியம்மாள் பேசியது:

பருவ நிலை மாற்றத்தால் தமிழகத்தில் தற்போது போதிய மழை இல்லை. தமிழக அரசு மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

வீடுகள்தோறும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்தால், வீணாகும் மழை நீரை சேமிக்க முடியும். மழை நீர் சேகரிப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

பிளஸ் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர் நக்கீரனுக்கு ரூ.10 ஆயிரமும், மாணவர்கள் ஹரிபிரசாத், இளமாறன் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

விழாவில் நிர்வாக அலுவலர் கே.கார்த்திக், பள்ளி முதல்வர் ஆர்.பி. ராஜசேகர், துணை முதல்வர் மணிமொழி, இயக்குநர் டி.பொற்கொடி மோகன், ஐ.எம்.எஸ். கல்வி நிறுவன துணைத் தலைவர் ஏ.கே.பி. மூர்த்தி, வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத் தாளாளர் பிரபாகரன், கல்வியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி              10.07.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

நாட்டறம்பள்ளியில் அனைத்து வீடுகள், கட்டடங்களிலும் ஜூலை 15-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.சரோஜா தலைமை வகித்தார்.  செயல் அலுவலர் ஜலேந்திரன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 142 of 841