Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் :குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அறிவுரை

Print PDF

தினமலர்          05.07.2013

மழைநீர் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் :குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அறிவுரை


கடலூர் : மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அமல்ராஜ் கூறினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கடலூர் ஜாங்கிட் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. உதவி இயக்குனர் (ஊராட்சி) கதிரேசன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அமல்ராஜ் தலைமை தாங்கி பேசுகையில், "அதிகரிக்கும் மக்கள் தொகை, நகரமயமாதல், தொழிற்சாலை வளர்ச்சி உட்பட பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு சராசரி மழை அளவு 1,316 மி.மீ., ஆகும். இதனால், கடலூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.

குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக முதல்வர் ஜெ., கடந்த 2001ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டத்தைத் துவக்கினார். அனைவருக்கும் தங்கள் வீடுகள், பகுதிகளில் மழைநீர் சேகரிக்கும் கடமை உள்ளது.
மழைநீரை சேமிப்பதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஊராட்சி தலைவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்' என்றார்.

கூட்டத்தில், செயற் பொறியாளர் அந்தோணிசாமி, பொறியாளர்கள் ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

 

மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர்

Print PDF

தினமணி               04.07.2013

மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:  ஆட்சியர்

மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

 விருதுநகர் தனியார் அரங்கத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

 கருத்தரங்கை தொடங்கிவைத்து ஆட்சியர் ஹரிஹரன் பேசியதாவது: தற்போதைய சூழ்நிலையில் மழை நீர் சேகரிப்பு அவசியமான ஒன்றாகும். அதனால், இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

 தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மழை நீரை சேமிப்பது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் இங்கு கருத்துரை வழங்கப்பட இருக்கிறது. இதை அனைவரும் அறிந்து கொண்டு, தங்கள் கிராமங்களிலும் செயல்படுத்த வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயத்தில் நீர்நிலைகளில் நீரில் அளவு குறைந்து கொண்டே வருகிறது. எனவே நீர் ஆதரங்களில் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு மழைநீர் சேகரிப்பு செயற்கை செறியூட்டும் கட்டமைப்பு ஏற்படுத்துவது அவசியமாகும்.

 அதனால், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் உள்ளிட்டவைகளின் அருகிலே மழை நீர் சேகரிப்பு அமைக்கும் திட்டம் 2001-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே முன்கூட்டியே அரசு அலுவலகங்கள், கண்மாய், குட்டைகள் உள்ளிட்டவைகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.

 இதற்காகவே, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் புதிய வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் டி.என்,ஹரிஹரன் கூறினார்.

 முகாமில் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் புகழேந்தி வரவேற்புரை வழங்கினார். உதவி செயற்பொறியாளர் குணசேகரன் நன்றி கூறினார். இதில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பீபீஜான். நிலநீர் ஆய்வாளர்கள் கணபதிசுப்பிரமணியன், பார்த்தீபன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 

கொடைக்கானலில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி               04.07.2013

கொடைக்கானலில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கொடைக்கானல் நகராட்சி சார்பில், மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, சட்டப்பேரவை உறுப்பினர் வேணுகோபாலு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில், நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) எட்வர்ட், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் இளம்வழுதி, அவைத் தலைவர் வெங்கட்ராமன், நகர கூட்டுறவு தொடக்க வங்கித் தலைவர் ஏ.டி. ஆரோக்கியசாமி, நிர்வாகி டாக்டர் கணேஷ், வேளாண்மைக் கூட்டுறவுத் தலைவர் பிச்சை, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பொன்னுத்துரை, நகரச் செயலர் ஜான்தாமஸ், அதிமுக நிர்வாகிகள் சாதிக், ஸ்ரீதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், நகர்ப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் எனஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 இந்த ஊர்வலமானது, மூஞ்சிக்கல், காமராஜர் சாலை, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், பேருந்து நிலையம ஆகியப் பகுதிகள் வழியே சென்றது. மழை நீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் கோஷமிட்டுச் சென்றனர்.

 


Page 144 of 841