Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகர்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி

Print PDF
தினமணி               01.07.2013

நகர்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி

பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகர்மன்ற சாதாரணக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றித் தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளிக்கிழமை நடந்த நகர்மன்றக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

இதில் என்.எல்.சி.,நிறுவன பங்குகளை எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும் விற்பனை செய்யக் கூடாது, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம், தமிழ் மாநில தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் போன்ற தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வருக்கு நன்றித் தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினர்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, பொறியாளர் ராதா, துணைத் தலைவர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

சேலம் கொண்டலாம்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி            30.06.2013

சேலம் கொண்டலாம்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலம் மாநகராட்சி மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கொண்டலாம்பட்டி மண்டலத்திலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கொண்டலாம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலம் சந்தைப்பேட்டை, ராஜாவாய்க்கால் போன்ற முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்ததது. இந்த ஊர்வலத்தில் வானத்தில் மழை துளி; வையத்தின் உயிர் துளி, மழை நீரை சேமிப்போம்; மண்வளம் காப்போம், வீட்டுக்கு வீடு மழை நீரை சேகரிப்போம்; நீர்வளம் பெருக்குவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திசென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில், மண்டலக்குழுத் தலைவர் சண்முகம், கவுன்சிலர்கள் மீனாட்சிசுந்தரம், பரமசிவம், பள்ளி தலைமை ஆசிரியர் மனோன்மணி மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF
தினகரன்                30.06.2013

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி


கழுகுமலை, : கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கழுகுமலை பேருராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேருராட்சி தலைவர் சுப்பிரமணியன் பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) தமிழரசி முன்னிலை வகித்தார். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி மேலபஜார், அரண்மனைவாசல் தெரு, தெற்குரதவீதி, கீழபஜார் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியவாறு கோஷமிட்டபடி சென்றனர். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் பொன்ராஜ்பாண்டியன், உடற்கல்வி இயக்குநர் மயில்சாமி, மற்றும் சாரணர்படை, பசுமைபடை மாணவர்கள் பங்கேற்றனர்.
 


Page 146 of 841