Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தெற்கு தில்லி மாநகராட்சியில் "பருவமழை அவசரகாலத் திட்டம்'

Print PDF

தினமணி                28.06.2013

தெற்கு தில்லி மாநகராட்சியில் "பருவமழை அவசரகாலத் திட்டம்'

தெற்கு தில்லி மாநகராட்சியில் பருவமழையால் ஏற்படும் வெள்ளபாதிப்பு தொடர்பான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அவசரகாலத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பருவமழையை முன்னிட்டு தெற்கு தில்லி மாநகராட்சி மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய "பருவமழை அவசரகாலத் திட்டம் -2013' என்ற கையேட்டை வியாழக்கிழமை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் மாநகராட்சி அவைத் தலைவர் சுபாஷ் ஆர்யா கூறியது:

மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம், மரம் விழுதல், கழிவுநீர்க் கால்வாய் அடைப்பு உள்ளிட்டவை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் புதிதாக உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விவரங்கள் தெற்கு தில்லி மாநகராட்சியின் இணையதளத்திலும், இக்கையேட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தடுப்பு உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் முக்கிய கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள், தெற்கு தில்லி மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்கள் ஆகியவற்றை கையேட்டில் அறிந்து கொள்ள முடியும்.

மழைக்காலங்களில் சாலை, தெருக்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க, வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கூடுதலாக "பம்ப் செட்டுகள்' நிறுவப்படும்.

தாற்காலிக வெள்ள நீர் வெளியேற்றும் நிலையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும். வெள்ள நீரை வெளியேற்ற தற்போது தெற்கு தில்லி மாநகராட்சியெங்கும் 20 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார் சுபாஷ் ஆர்யா.

 

மழைநீர் சேகரிப்பு கலந்தாய்வுக் கூட்டம்

Print PDF
தினமணி                28.06.2013

மழைநீர் சேகரிப்பு கலந்தாய்வுக் கூட்டம்


மழை நீர் சேகரிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் உடுமலை நகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா தலைமை வகித்தார். ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பொது மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது என  கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உடுமலை நகரத்தை 3 மண்டலங்களாக பிரித்து, 33 வார்டுகளுக்கும் அதற்கென நகராட்சி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. பொறியாளர் செந்தில்குமார், நகரமன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவேகானந்தர் ரதம்: சுவாமி விவேகானந்தரின் ரதத்துக்கு உடுமலை நகராட்சி சார்பில் வரவேற்பு புதன்கிழமை அளிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா விவேகானந்தர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வரவேற்றார். கோவை ராமகிருஷ்ண மிஷின் வித்யாலயத்தைச் சேர்ந்த தர்மாத்மானந்தா, ஈஷானந்தா ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
 

திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம்

Print PDF

தினமணி                28.06.2013 

திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம்

மேட்டுப்பாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

 மேட்டுப்பாளையம் நகராட்சி, சி.எம்.எஸ்.எஸ்.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமை நகர்மன்றத் தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர் வேலியப்பன் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவன அமைப்பாளர் ஜெகன் ஆண்டனி வரவேற்றார்.

 பின்னர் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாமில், குப்பையைத் தரம் பிரித்து அவற்றை முறையாகக் கையாள்வது குறித்தும், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சியை வேலியப்பன் (எக்ஸ்னோரா), புஷ்பராஜ் (தொண்டு நிறுவனம்) மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நல்லுசாமி வழங்கினர்.

 இதில், சி.எம்.எஸ்.எஸ்.எஸ். தொண்டு நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராணி நன்றி கூறினார்.

 


Page 147 of 841