Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இன்று மேட்டுப்பாளையம் நகராட்சியில்2-ஆவது கட்ட புகைப்படம் எடுக்கும் பணி

Print PDF

தினமணி                28.06.2013 

இன்று மேட்டுப்பாளையம் நகராட்சியில்2-ஆவது கட்ட புகைப்படம் எடுக்கும் பணி

மேட்டுப்பாளையம் நகராட்சியில், தேசிய மக்கள் தொகை தயாரிப்பதற்காக அடையாள அட்டைக்கான புகைப்படம், கைவிரல் ரேகை, விழித்திரை ஆகியவை பதிவு செய்யும் பணி ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

 முதல்கட்ட முகாம்கள் முடிந்துள்ள நிலையில், 2-ஆவது கட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கப்பட உள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து நகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 அதன் விவரம்: ஜூன் 28 முதல் 30 வரை மேட்டுப்பாளையம் நேஷனல் குழந்தைகள் பள்ளியிலும், 28 முதல் ஜூலை 8 வரை நேதாஜி நகராட்சி துவக்கப் பள்ளியிலும், 1 முதல் 8 வரை வ.உ.சி. நகராட்சி துவக்கப் பள்ளியிலும், ஜூலை 9 முதல் 12 வரை நகராட்சி பெண்கள் மேநிலைப் பள்ளி மற்றும் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியிலும், ஜூலை 13 முதல் 19 வரை காட்டூர் நகராட்சி துவக்கப் பள்ளியிலும், 20 முதல் 26 வரை கேர்வெல் மெட்ரிக் பள்ளியிலும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும்.

 இதில், 5 வயதிற்கு மேல் உள்ள அனைத்து நபர்களின் பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். முகாமிற்கு வரும் ஒவ்வொருவரும் 2010 ஜூன்-ஜூலையில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டை கொண்டு வந்து புகைப்படம், கைவிரல் ரேகை, விழித்திரை ஆகியவற்றைப் பதிவு செய்யலாம்.

 வரும்போது ஒப்புகைச் சீட்டு, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட எண் ஆகியவற்றில் தங்களிடம் உள்ள ஆவணங்களை எடுத்து வர வேண்டும்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி                28.06.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி மற்றும் தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

   கீழக்கரை நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துதல் குறித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.     துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், தலைமை எழுத்தர் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி நகரின் முக்கிய சாலைகளான கிழக்கு தெரு, மேலத் தெரு, கஸ்டம்ஸ் ரோடு, தெற்கு தெரு, வடக்கு தெரு பகுதிகளில் சென்றது.      துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

 

சாத்தூர் நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி                28.06.2013

சாத்தூர் நகர்மன்றக் கூட்டம்

சாத்தூரில் நகர்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர்மன்றக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் டெய்சிராணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்தில் 24-ஆவது வார்டு உறுப்பினர் மணி, 7-ஆவது வார்டு உறுப்பினர், 15-ஆவது வார்டு உறுப்பினர் கலாவதி, 4-ஆவது வார்டு உறுப்பினர் வீரலட்சுமி ஆகியோர்  கூறுகையில்: தங்களது வார்டில் கடந்த ஒரு வாரமாக, குடிநீர் சரியாக வரவில்லை, இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதிலும் இல்லை, எனவே வார்டில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

   14-ஆவது வார்டு உறுப்பினர் கண்ணன் கூறுகையில்: வார்டில் பன்றிகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியபடுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்றார்.

  சுகாதார அலுவலர் தர்மராஜ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நகராட்சிக் கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுகாதார அலுவலர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 148 of 841