Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மேலும் 90 "அம்மா' உணவகங்கள் திறக்க ஏற்பாடு

Print PDF

தினமணி                28.06.2013

மேலும் 90 "அம்மா' உணவகங்கள் திறக்க ஏற்பாடு

மதுரையில் மேலும் 90 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அரசு அனுமதி கிடைத்தவுடன் இந்த உணவகங்கள் திறக்கப்படும் என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

 மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தெற்கு மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து பேசுகையில், மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உண்மையான ஏழைகள் சாப்பிடுகின்றனர். இந்த உணவகங்களில் காலையில் வழங்கப்படும் 1,200 இட்லிகளும், மதியம் வழங்கப்படும் சாதமும் போதவில்லை. கூடுதலாக உணவுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதிக அளவில் அம்மா உணவகங்களை திறக்க முதல்வருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.

 மார்க்சிஸ்ட் உறுப்பினர் செல்லம் பேசுகையில், அம்மா உணவகங்களுக்கு மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3 ஆயிரம் நிதி வழங்குவதாகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசு நிதி வழங்கவில்லையா?, எந்த நிதியில் இந்த உணவகங்கள் செயல்படுகின்றன? என்றார்.

 ஆணையர் ஆர். நந்தகோபால் பதில் அளிக்கையில், அம்மா உணவகங்கள் மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படுகின்றன. உணவகங்களுக்கு அரசு நிதி  ஒதுக்கீடு விரைவில் கிடைக்க உள்ளது. பராமரிப்பு பணிக்காக பினாயில், பாத்திரம் கழுவும் பவுடர் போன்றவை மாநகராட்சி பொது நிதியில் இருந்து வழங்கப்படுகிறது, என்றார்.

 தங்களது வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் திறக்க வேண்டும் என பல மாமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர்.

 இதற்கு மேயர் பதில் அளிக்கும்போது, ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள 10 அம்மா உணவகங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மீதமுள்ள 90 வார்டுகளிலும் அம்மா உணவகங்களைத் திறக்க முயற்சி எடுத்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன், இந்த வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்படும், என்றார்.

 

ஆத்தூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி           28.06.2013

ஆத்தூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. ஊர்வலத்தை எஸ்.மாதேஸ்வரன் எம்.எல்.ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்து ஊர்வலத்தில் நடந்து சென்றார். இதில் நரசிங்கபுரம் நகரசபை தலைவர் எம்.காட்டுராஜா, ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவ.வேலப்பன், நகரசபை ஆணையாளர் சித்ரா, பொறியாளர் அம்சா, கவுன்சிலர்கள் பெருமாள், தேவன், மாலாபாலமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.டி அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளி வளாகத்தை அடைந்தனர்.
 

சேலம் கொண்டலாம்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி           28.06.2013

சேலம் கொண்டலாம்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலம் மாநகராட்சி மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கொண்டலாம்பட்டி மண்டலத்திலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

கொண்டலாம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலம் சந்தைப்பேட்டை, ராஜாவாய்க்கால் போன்ற முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்ததது. இந்த ஊர்வலத்தில் வானத்தில் மழை துளி; வையத்தின் உயிர் துளி, மழை நீரை சேமிப்போம்; மண்வளம் காப்போம், வீட்டுக்கு வீடு மழை நீரை சேகரிப்போம்; நீர்வளம் பெருக்குவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திசென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்தில், மண்டலக்குழுத் தலைவர் சண்முகம், கவுன்சிலர்கள் மீனாட்சிசுந்தரம், பரமசிவம், பள்ளி தலைமை ஆசிரியர் மனோன்மணி மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 149 of 841