Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேகரிப்பு விளக்கக் கூட்டம்

Print PDF

தினமணி               26.06.2013

மழைநீர் சேகரிப்பு விளக்கக் கூட்டம்

திண்டிவனம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மேலாளர் கிருஷ்ணராஜ் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பு, வணிக, தொழிற்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றில் உடனடியாக மழைநீர்சேகரிப்பு திட்ட கட்டமைப்புகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் ஏற்படுத்த தேவையான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். இதற்கென 33 வார்டுகளிலும் குழு அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுமென தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில் ஆணையர் அண்ணாதுரை, நகர்மன்ற துணைத்தலைவர் ஏ.வி.முகமதுஹரிப், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               26.06.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

பண்ருட்டி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி பள்ளி மாணவர்களை கொண்டு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் பண்ருட்டி நகரில் உள்ள பள்ளிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் பதாகைகளை ஏந்தி மழைநீர் சேகரிப்பு குறித்த வாசகங்களை முழங்கியவாறு முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை அடைந்தனர்.  விழிப்புணர்வுப் பேரணியை நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் கொடியசைத்து  தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் மல்லிகா, கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், வியாபார சங்க மற்றும் நகர முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி               26.06.2013

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டம் புதன்கிழமை (ஜூன் 26) காலை ரிப்பன் கட்டடத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் நீர்வழித் தடங்களில் வசிப்பவர்களுக்கு இலவச கொசுவலை, வீடுகளுக்கு இலவச நொச்சி செடி வழங்கும் திட்டம், மேம்பாலப் பணிகள், அம்மா உணவகங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றின் கீழ் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பது, புதுப்பிக்கப்படாத சாலைகள், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகிய பிரச்னைகளை கூட்டத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


Page 152 of 841