Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Print PDF

தினகரன்             25.06.2013 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர்: வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஆம்பூர் இந்து மேனிலைப்பள்ளியில் இருந்து நகராட்சி தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆணை யாளர் (பொறுப்பு) குமார் முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.இதில், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க தலைவர் மதியழகன், வேலூர் மேற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பாலசுப்பிரமணி, கவுன்சிலர்கள் சீனிவாசன், சரவணன், பிலால் அஹ்மத், ஆகில் அஹ்மத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் நடந்த மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நகராட்சி தலைவர் காத்தவராயன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் ஆலியார்ஜுபேர் அஹமத் முன்னிலை வகித்தார். பொறியாளர் ஜெயகுமார் வரவேற்றார்.
இதில், கவுன்சிலர்கள், வருவாய் ஆய்வாளர் இன்பசேகரன், துப்புரவு ஆய்வாளர்கள் சந்திரசேகரன், ஆதிகேசவலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆற்காடு: ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்ட மழைநீர் விழிப்புணர்வு ஊர்வலத்தை நகராட்சி தலைவர் ஆர்.புருஷோத்தமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், துணை தலைவர் எஸ்.கீதாசுந்தர், ஆணையா ளர் செ.பாரிஜாதம், பொறி யாளர் கார்த்திகேயன், சமுதாய அமைப்பாளர் ம.துரை, கவுன்சிலர்கள் கோபி, செந்தில்குமார், பார்த்தசாரதி, பாலாஜி, மல்லிகா, லதா சோமசேகரன் மற்றும் ஜி.வி.சி. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

வாலாஜா: வாலாஜா நகராட்சி சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மகாத்மா காந்தி பூங்கா அருகே நகராட்சி தலைவர் வேதகிரி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் மூர்த்தி, ஆணையாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.பின்னர், அரசு பெண்கள் பள்ளியில் நடந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா, மாவட்ட கவுன்சிலர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா நகர செயலாளர் மோகன், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் நாரயணன், பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் முரளி, அபிபுல்லா, ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி நெல்லையில் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்               25.06.2013

மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி நெல்லையில் விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி : மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி நெல்லை சி.என்.கிராமத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. நெல்லை மாநகராட்சி சார்பில் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நெல்லை சி.என்.கிராமத்தில் துவங்கி, நெல்லை ஜங்ஷன் தச்சநல்லூர் மண்டல அலுவலகம் வரை நடந்தது. பேரணியை மேயர் விஜிலா சத்தியானந்த் துவக்கி வைத்தார். துணைமேயர் ஜெகநாதன், கமிஷனர் மோகன் முன்னிலை வகித்தார். இதில் மண்டல தலைவர் மாதவன், மாநகராட்சி கவுன்சிலர் சிதம்பஜோதி, சண்முகவேல், சுகாதாரக்குழு தலைவர் வண்ணை கணேசன், வேல்முருகன், முத்துராஜ், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக் கமிஷனர் ஜோதிலிங்கம், தலைமை ஆசிரியை நாராயண சுந்தரி, பேச்சாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்               25.06.2013

விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.சேர்மன் தனசேகரன் தலைமை வகித்தார். துணைச் சேர்மன் பாலசுப்ரமணி, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் ராஜேந்திரன் வரவேற்றார். புத்தர் தெரு நகராட்சி உயர்நிலைப் பள்ளி முன்பு துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது. பள்ளி மாணவ, மாணவியர், நகராட்சி ஊழியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 153 of 841