Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகரங்களிலும் அம்மா உணவகங்கள்

Print PDF

தினமணி               18.06.2013 

நகரங்களிலும் அம்மா உணவகங்கள்

மாநகரங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கிவரும் அம்மா உணவகங்களை ஏழை, நடுத்தர மக்கள் நலன்கருதி நகரங்களிலும் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதச் சார்பற்ற ஜனதாதளம் கோரிக்கை விடுத்துள்ளது.

குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியாத்தம் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நகரையொட்டி புறவழிச்சாலை அமைக்க வேண்டும், விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் உடனடியாக ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர். சண்முகம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் எம். தண்டபாணி வரவேற்றார்.

மாவட்ட பொதுச்செயலர்கள் ஜி. நடராஜன், எம். முனிசாமி, மாவட்டச் செயலர் எஸ். ராம்லால் சர்மா, கட்சியின் மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் கே. சுயராஜ், ஆம்பூர் நகரத்  தலைவர் வி. முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் எம். ராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மேட்டுப்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               18.06.2013 

மேட்டுப்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரமடை சாலை அபிராமி திரையரங்கு முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமாசெல்வி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் ஜெயராமன் வரவேற்றார்.

பேரணியை தொகுதி எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மகாஜன மேல்நிலைப் பள்ளி, நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக், ஜிஎம்ஆர்சி நடுநிலைப் பள்ளி ஆகிய கல்வி நிலையங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டபடி சென்றனர்.

கோவை சாலை, உதகை சாலை, சிறுமுகை சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது பேரணி. இதில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பி.ஆர்.சுப்பையன், நகர கழக செயலர் வான்மதி சேட், நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ளிங்கிரி, மோகன்குமார், சூரியபிரகாஷ், விஜயகுமாரி, நகராட்சி உதவிப் பொறியாளர் சண்முகவடிவு, நகரமைப்பு அலுவலர் சத்யா, துப்புரவு ஆய்வாளர்கள் நல்லுசாமி, செந்தில்குமார், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Print PDF

தினமணி               18.06.2013 

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பருவ மழை தொடங்குவதையொட்டி, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் அரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு, வார்டு கவுன்சிலர்கள் மாரியப்பன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகநாத் சிங் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டபடி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். சுகாதார ஆய்வாளர் பரமசிவம், கவுன்சிலர்கள் முருகேசன், சிவராஜ், கிருஷ்ணன், தலைமை ஆசிரியை மலர்க்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 160 of 841