Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கவனத்துக்கு...

Print PDF

தினமணி               18.06.2013 

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கவனத்துக்கு...

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம், அண்ணா மாளிகையில் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

 மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தலைமையில், அன்றைய தினம் காலை 10.30}க்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், காலை 11.30}க்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 12.30}க்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 3}க்கு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 3.30}க்கு இடைநிலை ஆசிரியர்களுக்கும் நடைபெறும்.

 ஆசிரியர்கள் விண்ணப்பப் படிவத்தை ஜூன் 19 ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.    விண்ணப்பித்த ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். காலிப் பணியிட விவரம் மற்றும் பணிமூப்பு பட்டியல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது, என மாநகராட்சி கல்வி அலுவலர் ஆர். மதியழகராஜ் தெரிவித்துள்ளார்.

 

நகராட்சிகளில் குறைதீர்க் கூட்டம்

Print PDF

தினமணி               18.06.2013

நகராட்சிகளில் குறைதீர்க் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் நகராட்சியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆணையர் விமலா தலைமை வகித்தார். கூட்டத்தில் பசுமை வீடு, குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 15 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தீர்வு காணப்படும் என்று ஆணையர் விமலா தெரிவித்தார்.

இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள 8 நகராட்சிகளில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் 117 மனுக்கள் பெறப்பட்டன.

 

திமிரி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி             16.06.2013

திமிரி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திமிரியில் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை திமிரி பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் போது மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 


Page 161 of 841