Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மலிவு விலை உணவகங்களில் குறைகளை எழுத பதிவேடு தமிழக அரசு உத்தரவு

Print PDF

தமிழ் முரசு             16.06.2013

மலிவு விலை உணவகங்களில் குறைகளை எழுத பதிவேடு தமிழக அரசு உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருச்சி:அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் மக்கள் தங்கள் கருத்துகளை எழுத பதிவேடு வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் துவங்கப்பட்ட மலிவு விலை உணவகங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த 2ம் தேதி முதல் அந்த திட்டம் திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இங்கு காலையில் இட்லி, மதியம் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், ஜங்சன், புத்தூர் உள்பட 10 இடங்களில் செயல்படும் மலிவு விலை உணவகங்களில் உணவு வகைகளின் சுவை, தரம் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. இதுபற்றி குற்றச்சாட்டு எழுந்ததால் அனைத்து உணவகங்களிலும் தரமான, சுவையான உணவு வகை களை தயாரித்து வழங்குமாறு மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிவுறுத்தினார். மேயர் ஜெயா நேற்று உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே, மலிவு விலை உணவகத்தில் சாப்பிட வருவோர் அங்குள்ள நிறை, குறைகளை பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு உணவகத்திலும் கருத்து பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மலிவு விலை உணவகங்களில் தற்போது பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. அதில் பொது மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம். இந்த பதிவுகளை அப்படியே விட்டு விடாமல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
Last Updated on Monday, 17 June 2013 09:10
 

நெல்லை மாநகராட்சி வழக்குரைஞர் நியமனம்

Print PDF

தினமணி               15.06.2013 

நெல்லை மாநகராட்சி வழக்குரைஞர் நியமனம்

திருநெல்வேலி மாநகராட்சி வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞர் ஏ. பால்கனி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி தொடர்பான வழக்குகளை கையாளுவதற்காக மாநகராட்சி வழக்குரைஞராக திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த ஏ. பால்கனியை நியமனம் செய்ய சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ஏ. பால்கனியை திருநெல்வேலி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வழக்குரைஞராக நியமனம் செய்ய மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஏ. பால்கனியை மாநகராட்சி வழக்குரைஞராக நியமித்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) த. மோகன் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் திருநெல்வேலி மாநகராட்சி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மாநகராட்சி சார்பில் வழக்குரைஞர் பால்கனி ஆஜராகி வாதாடுவார் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்குரைஞரான ஏ. பால்கனி இதற்கு முன்பு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி               14.06.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

காரமடை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரமடை அரசு நடுநிலைப் பள்ளி முன்பு துவங்கிய பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் டி.டி ஆறுமுகசாமி தலைமை தாங்கினார்.

  பேரணியில் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் கந்தசாமி, வேணுகோபால், முத்துசாமி, மனோகரன் உள்ளிட்டோரும், பள்ளிக் குழந்தைகளும், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது.

 


Page 162 of 841