Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

1½ மணி நேரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தன திருப்பூர் அம்மா உணவகங்களில் அலைமோதிய தொழிலாளர்கள்

Print PDF
தினதந்தி       04.06.2013

1½ மணி நேரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தன திருப்பூர் அம்மா உணவகங்களில் அலைமோதிய தொழிலாளர்கள்


திருப்பூர் அம்மா உணவங் களில் உணவு சாப்பிட தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பியது. இதனால் 1½ மணி நேரத்தில் அனைத்து உணவுகளும் விற்று தீர்ந்தன.

அம்மா உணவகம்

திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர்சாதம் ரூ.3 என்ற மலிவு விலையில் வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் காலை 10 மணிவரை இட்லி, சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று காலை உணவகம் திறந்த 1½ மணி நேரத்திலேயே அனைத்து இட்லியும் விற்று தீர்ந்தன. இதன்காரணமாக மதியம் 11 மணி முதலே சாம்பார் சாதம், தயிர்சாதம் சாப்பிட டோக்கன் வாங்க பொதுமக்கள், தொழி லாளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். மதியம் உணவகங்கள் திறந்த ஒரு மணி நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தன.இதனால் பலர் உணவு கிடைக்காமல் ஏமாற் றத்துடன் திரும்பி சென்ற னர்.

இதுகுறித்து உணவகங்களின் கண்காணிப்பு குழு அதி காரியான மாநகராட்சி நகர் நல அதிகாரி டாக்டர் செல்வ குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:

திருப்பூரில் உள்ள 10 உண வகங்களில் ஒரு உணவகத்தில் நாள் ஒன்றுக்கு 1200 இட்லி, தலா 300 சாம்பார் சாதம், தயிர்சாதம் தயாரிக்க திட்ட மிடப்பட்டது. அதன்படி நேற்று 10 உணவகங்களிலும் 12 ஆயிரம் இட்லி, தலா 3 ஆயிரம் சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றதால் அனைத் தும் விற்று தீர்ந்து விட்டன. நாளை (இன்று) முதல் தேவைப்படும் உணவகங்களில் கூடுதலாக உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

12 ஆயிரம் இட்லிகள் 1 மணி நேரத்தில் தீர்ந்தன

Print PDF
தினமணி        04.06.2013

12 ஆயிரம் இட்லிகள் 1 மணி நேரத்தில் தீர்ந்தன


திருநெல்வேலியில் அம்மா மலிவு விலை உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 10 இடங்களிலும் சேர்த்து 12 ஆயிரம் இட்லிகள் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார். அனைத்து உணவகங்களிலும் முதல் நாள் மதிய உணவு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.

திங்கள்கிழமை காலைமுதல் 10 மலிவு விலை உணவகங்களும் முழு அளவில் செயல்படத் தொடங்கின. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்பனை செய்யப்பட்டது. ஒரு ரூபாய் இட்லியை வாங்க அதிகாலை முதலே மக்கள் மலிவு விலை உணவகங்களை முற்றுகையிடத் தொடங்கினர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து இட்லி வாங்கி சாப்பிட்டனர். அனைத்து உணவகங்களிலும் ஒரு மணி நேரத்தில் அனைத்து இட்லிகளும் விற்றுத் தீர்ந்தன. மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள உணவகத்தில் மட்டும் சில இட்லிகள் மிச்சம் இருந்தன. அவை மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

ஒவ்வொரு கடையிலும் தலா 1200 இட்லிகள் என தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சில கடைகளில் கூடுதல் எண்ணிக்கையில் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டன.

ஒரு இட்லி ரூ.1 வீதம் ஒவ்வொரு கடையிலும் ரூ.1200-க்கு இட்லி விற்பனையானது. 10 கடைகளிலும் மொத்தம் ரூ.12 ஆயிரத்துக்கு இட்லி விற்பனை செய்யப்பட்டது.

அதுபோல மதியம் 12 மணிமுதல் ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டன. ஒவ்வொரு கடையிலும் தலா 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஒவ்வொரு கடையிலும் ரூ. 2400 வீதம் 10 கடைகளிலும் ரூ.24 ஆயிரத்துக்கு மதிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த உணவுகளை மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சாப்பிட்டனர். உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

அம்மா உணவகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Print PDF

தினமணி        04.06.2013

அம்மா உணவகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்ட மலிவு விலை உணவகங்கள் அனைத்திலும் திங்கள்கிழமை கூட்டம் அலைமோதியது.

டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற பலரும், நேரம் செல்லச்செல்ல

முண்டியடித்ததை அடுத்து ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

வேலூர் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள உணவகம் காலை 7 மணிக்கு தொடங்கிய சிறிது நேரத்திலேயே தயாரிக்கப்பட்ட 1,200 இட்லிகளும் விற்றுத் தீர்ந்தன.

தள்ளுமுள்ளு: நண்பகலில் தயிர் சாதம், சாம்பார் சாதம் வாங்க நின்ற கூட்டத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் டோக்கன் வழங்கும் கவுன்ட்டர் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்தன.

பாகாயம், காட்பாடி, காந்தி நகர், கஸ்பா, கொசப்பேட்டை ஆகிய இடங்களி உள்ள உணவகங்களிலும் திங்கள்கிழமை தயாரிக்கப்பட்ட அனைத்து உணவுகளும், விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டபோது, 10 உணவகங்கள் மூலம் திங்கள்கிழமை 2,700 தயிர் சாதம், 3,500 சாம்பார் சாதம், 14 ஆயிரம் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மக்களிடம் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் நிலையில், அரசிடம் கூடுதல் மூலப்பொருள் ஒதுக்கீடு பெற முயற்சி எடுக்கப்படும்.

சில இடங்களில் இலவசமாக டோக்கன் வழங்கப்பட்டு, உணவு வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய தொகை முழுமையாக இரு நாள்களும் வந்துவிட்டன என்றார்.

 


Page 167 of 841