Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அம்மா உணவகத்தில் புதிய உணவு வகைகளுக்கு அமோக வரவேற்பு

Print PDF
தினமணி                 04.06.2013

அம்மா உணவகத்தில் புதிய உணவு வகைகளுக்கு அமோக வரவேற்பு
 


சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் புதிய உணவு வகைகளுக்கு அமோக வரவேற்பு உள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கூடுதலாக பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றின் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து காலையில் வழங்கப்படும் இட்லியுடன் கூடுதலாக பொங்கலும், மதியத்தில் வழங்கப்படும் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கூடுதலாக கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதமும் வழங்கப்படுகிறது.

பொங்கல் விற்பனை அமோகம்: ஞாயிற்றுக்கிழமை முதல், கூடுதல் உணவு வகைகள் விற்பனை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை காலை 200 அம்மா உணவகங்களிலும் மொத்தம் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் மதிய வேளையில் 18,146 கறிவேப்பிலை சாதமும், 20,542 எலுமிச்சை சாதமும் விற்பனையாகி உள்ளன. இந்த உணவகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் மதிய வேளைகளில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்படும். முதல் நாளான திங்கள்கிழமை இரண்டு சாத வகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இட்லி விற்பனை குறைவு: உணவகங்களில் புதிய சாத வகைகளின் விற்பனை தொடங்கியதால் இட்லி, சாம்பார், தயிர் சாதங்களின் விற்பனை சற்று குறைந்துள்ளது.

இந்த உணவகங்களில் வழக்கமாக சுமார் 3.30 லட்சம் இட்லியும், 30,000 தயிர் சாதமும், 60,000 சாம்பார் சாதமும் விற்பனை ஆகும்.  புதிய உணவு வகைகளின் அறிமுகத்தால், சுமார் 2.50 லட்சம் இட்லியும், 35,000 சாம்பார் சாதமும், 28,000 தயிர் சாதமும் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
Last Updated on Tuesday, 04 June 2013 06:07
 

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு

Print PDF
தினகரன்         03.06.2013

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு


நெல்லை, : சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மீதமுள்ள 9 மாநகராட்சிகளிலும் முதல்வர் ஜெய லலிதா நேற்று பிற்பகலில் மலிவு விலை உணவகங் களை தொடங்கி வைத்தார்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 10 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர் சாதம் ரூ.3க்கும் வழங்கப்படுகிறது.  

மேலப்பாளையத்தில் நடந்த மலிவு விலை உணவக திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தூர் பாண் டியன், மாநகர் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன், கலெக்டர் சமயமூர்த்தி, மேயர் விஜிலா, ஜெ.,பேரவை செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் உணவு வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், துரையப்பா, முத்து செல்வி, துணை மேயர் கணேசன், ஜெ.,பேரவை பரணி சங்கரலிங்கம், மானூர் ஒன்றிய சேர்மன் கல்லூர் வேலாயுதம், மாநகராட்சி கமிஷனர் மோகன், மண்டல சேர்மன்கள் ஹைதர் அலி, மோகன், தச்சை மாதவன், எம்.சி. ராஜன், முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன், முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத் தையா, மாநகராட்சி பணிக்குழு சேர்மன் குறிச்சி சேகர், சுகாதார குழு சேர்மன் வண்ணை கணே சன், மகளிரணி செயலாளர் வசந்தி முருகேசன் , மாவட்ட இளைஞரணி பொருளாளர் அசன் ஜாபர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உணவகத்திலுள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தச்சை அலகு அலுவலகத்தில் செயல்படும் மலிவு விலை உணவகத்தையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

10 உணவகங்களும் இன்று முதல் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் செயல்படும்.

உணவகம் செயல்படும் இடங்கள்

டவுன் தொண்டர் சன்னதி தெரு, தச்சநல்லூர் பழைய பஞ்சாயத்து அலுவலகம், மேலப்பாளையம் காவல் நிலையம் அருகிலுள்ள கட்டிடம் பாளை மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகேயுள்ள கட்டிடம், புதுப்பேட்டையில் மாநகராட்சி ஆஸ்பத்திரி வளாகம், கணேசபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி கட்டிட வளாகம், டவுன் வையாபுரிநகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சமீபம், பாளை அம்பேத்கர் காலனி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக புதிய கட்டிடம் எதிர்புறம், பாளை திம்மராஜபுரம் அலகு அலுவலகம் சமீபம், மேலப்பாளையம் பழைய அலகு அலுவலக வளாகம்.
 

மலிவு விலை உணவகத்தில் ஒரே நாளில் 33,000 பொங்கல் சேல்ஸ்

Print PDF

தமிழ் முரசு            03.06.2013

மலிவு விலை உணவகத்தில் ஒரே நாளில் 33,000 பொங்கல் சேல்ஸ்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 200 மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் மதிய உணவாக 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் தயிர்சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, 200 உணவகத்திலும் காலை இட்லியுடன் கூடுதலாக பொங்கல், சாம்பார் ரூ.5க்கும் நண்பகல் எலுமிச்சை அல்லது கருவேப்பிலை சாதம் ரூ.5க்கும் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், 200 உணவகத்திலும் இன்று காலை முதல் பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. ஒரே நாளில் மட்டும் 33ஆயிரத்து 398 பொங்கல் விற்பனையாகி உள்ளது. அத்துடன் மதியம் சாம்பார் சாதத்துடன் கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டது.

 


Page 169 of 841