Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

9 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள்: முதல்வர் துவக்கினார்

Print PDF

தினபூமி               03.06.2013

9 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள்: முதல்வர் துவக்கினார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM(C)_14.jpg

சென்னை, ஜூன்.3 - சென்னை அம்மா உணவகங்களில் கூடுதல் உணவு வகைகளையும் 9 மாநகராட்சிகளில் அம்மா உணவங்களையும் முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  (2.6.2013) தலைமைச் செயலகத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவினை வயிறார உண்ணும் வகையில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ்ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி) மூலமாகத் திறந்து வைத்து, சென்னை மாநகரில் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்று செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் கூடுதல் உணவு வகைகள் வழங்கப்படுவதை துவக்கி வைத்தார்.

நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சத்தான உணவு வகைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகரில் வாழும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அைம்மா உணவகங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.2.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டன.

அம்மா உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஏழை, எளிய சாதாரண மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளதால் இதனை தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ்ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும்  10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ்ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10  அம்மா உணவகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் காலை சிற்றுண்டியில் கூடுதலாக பொங்கலும், மதிய உணவின் போது கூடுதல் சாத வகைகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, சென்னை மாநகரில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும், காலை சிற்றுண்டியின் போது இட்லி தவிர, பொங்கல் - சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 200 அம்மா உணவகங்களில் கூடுதல் உணவு வகைகளான பொங்கல் - சாம்பார் மற்றும் கறிவேப்பிலை / எலுமிச்சை சாதம் ஆகியவை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  இன்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர்,  சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

 

நெல்லை, தூத்துக்குடியில் 20 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு

Print PDF
தினமணி        03.06.2013

நெல்லை, தூத்துக்குடியில் 20 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு


திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார்.

ஏழை, எளிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சிப் பகுதியில்  200 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக  செயல்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் பிற 9 மாநகராட்சிகளிலும்  அம்மா மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை விடியோ கான்பரன்சிங்  மூலம் திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து, மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா  உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்  பூ.செந்தூர்பாண்டியன் உணவு விற்பனையைத் தொடங்கிவைத்தார்.

மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், தமிழக வீட்டு வசதி வாரிய உறுப்பினர்  ஆர்.முருகையாபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,  முத்துலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி, மாநகராட்சி ஆணையர்  (பொறுப்பு) த.மோகன், துணை மேயர் பூ.ஜெகநாதன், மண்டலத் தலைவர்கள் மாதவ ராமானுஜம், ம.கிறிஸ்துராஜன், எஸ்.கே.ஏ.ஹைதர் அலி, ந.மோகன், மாநகராட்சிப்  பொறியாளர் கே.பி. ஜெய்சேவியர், செயற்பொறியாளர் வி. நாராயணநாயர், மாநகர நல அலுவலர் பி. முனீஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் நாராயணபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், பரணி சங்கரலிங்கம், குறிச்சி டி.சேகர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முதல் நாளில் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சர்க்கரைப் பொங்கல்  இலவசமாக வழங்கப்பட்டது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உணவுகளை வாங்கி  உண்டனர்.

தூத்துக்குடி... தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

குரூஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில்  மாநகராட்சி சார்பில் விழா நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்சிங் மூலம் உணவகத்தைத் திறந்துவைத்தபிறகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன் உணவு வழங்கி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாநகராட்சி மேயர் எல். சசிகலா புஷ்பா, ஆணையர் சோ. மதுமதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என். சின்னத்துரை, துணை மேயர் பி. சேவியர், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா. ஹென்றி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பி. சண்முகவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்படும் எனவும், பார்சல் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறப்பு

Print PDF
தினமணி        03.06.2013

வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறப்பு


வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் திறக்கப்பட்டன.

   முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து விடியோ கான்ஃபரன்சிங் முறையில் வேலூர் உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகங்களை தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து வேலூர் ஆபிசர்ஸ் லைனில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டுள்ள மலிவு விலை உணவகத்தில் பிற்படுத்தப்பட்டோர்

நலத்துறை அமைச்சர் அ.முகமது ஜான், ஆட்சியர் பொ.சங்கர், மேயர் பி.கார்த்தியாயினி, சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

   அதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியன மலிவு விலையில் வழங்கப்பட்டன.

   காட்பாடி காந்தி நகரில் டான்போஸ்கோ பள்ளி அருகில், கஸ்பா நெடுந்தெரு, விருபாட்சிபுரம் மாநகராட்சி கடைகள் அருகில், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர்கள் குடியிருப்பு, தாராபடவேடு பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாநகராட்சி வணிக வளாகம், அலமேலுமங்காபுரத்தில் வெங்கடாபுரம் ரோடு, பாகாயம் மாநகராட்சி பள்ளி அருகில், கொசப்பேட்டை மார்க்கெட் உயர்நிலைப் பள்ளி அருகில் நிறுவப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின.

   இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 விலையில் 10 மலிவு விலை உணவகங்களிலும் வழங்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் தலா 300 சாம்பார் சாதம், தயிர் சாதம், 1200 இட்லி நாள்தோறும் தயாரித்து விற்பனை செய்யப்படும். மக்களின் வரவேற்புக்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

   இந்த உணவகங்கள் நாள்தோறும் காலை 7 முதல் 10 மணி வரை, நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும். உணவக செயல்பாடுகள் நாள்தோறும் கண்காணிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.

   விழாவில் துணை மேயர் வி.டி.தருமலிங்கம், மண்டலக்குழு தலைவர்கள் ஏ.பி.எல்.சுந்தரம், எஸ்.குமார், நியமனக்குழு தலைவர் சி.கே.சிவாஜி, கல்விக்குழு தலைவர் கே.சூரியாச்சாரி, சுகாதாரக்குழு தலைவர் பி.ரமேஷ், வரிக்குழு தலைவர் இ.இளவரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 170 of 841