Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறப்பு

Print PDF
தினமணி        03.06.2013

திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறப்பு


திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

  தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. டவுன்ஹால் பகுதி குமரன் வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம், முதலாவது மண்டல அலுவலக வளாகம்(15 வேலம்பாளையைம்), 15 வேலம்பாளையம் பழைய நகராட்சி அலுவலக வளாகம், ஆத்துப்பாளையம், பாண்டியன் நகர், சந்திராபுரம்,

4 ஆவது மண்டல அலுவலகம்(நல்லூர்), தென்னம்பாளையம் உள்பட 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகத்துக்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை தலைமையச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஜெயலலிதா மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார்.

 அதையடுத்து, திருப்பூரில் குமரன் வணிக வளாக அம்மா உணவகத்தில் மலிவு விலை உணவு விநியோகத்தை அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார். ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ், மாநகரப் பொறியாளர் எம்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு 1 இட்லி, சாம்பார், ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் தினமும் காலையில் 300 பேருக்கு இட்லி, சாம்பார், மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம், 300 பேருக்கு தயிர் என மொத்தம் 900 பேருக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படும். 10 இடங்களிலும் இதே எண்ணிக்கையிலான நபர்களுக்கு மலிவு விலை உணவு வழங்கப்படும். இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2.75 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் மலிவுவிலை உணவகம் திறப்பு

Print PDF
தினகரன்         03.06.2013

திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் மலிவுவிலை உணவகம் திறப்பு


தமிழக அரசால் அறிவிக்கபட்ட மலிவு விலை உணவகங்கள் திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் நேற்று 10 இடங்களில் திறக்கப்பட்டன.

சென்னையில் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்ததையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் மலிவுவிலை உணவகம் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 10 இடங்களில் மலிவுவிலை உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. டவுன்ஹால் பகுதி குமரன் வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம், கொங்கு பிரதான சாலை சின்னசாமியம்மாள் பள்ளி அருகில், முதலாவது மண்டல அலுவலக வளாகம்(15 வேலம்பாளையைம்), 15 வேலம்பாளையம் பழைய நகராட்சி அலுவலக வளாகம், ஆத்துப்பாளையம், பாண்டியன் நகர், சந்திராபுரம், 4 ஆவது மண்டல அலுவலகம்(நல்லூர்), தென்னம்பாளையம் என 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் மலிவுவிலை உணவகத்திற்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஜெயலலிதா மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் உணவகத்தை திறந்து வைத்தார்.

அதையடுத்து, திருப்பூரில் குமரன் வணிகவளாக அம்மா உணவகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெயர் பலகையை திறந்து வைத்து, மலிவு விலை உணவு விநியோகத்தை தொடங்கி வைத்தார். ஆட்சியர் கோவிந்தராஜ், மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், மாநகரப் பொறியாளர் எம்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த உணவகத்தில் ரூ.1க்கு 1 இட்லி, சாம்பார், ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் தினமும் காலையில் 300 பேருக்கு இட்லி,சாம்பார், மதியம் 300 பேருக்கு சாம்பார் சாதம், 300 பேருக்கு தயிர் என மொத்தம் 1,200 பேருக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படும்.

இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2.75 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 

தூத்துக்குடி மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு

Print PDF
தினகரன்         03.06.2013

தூத்துக்குடி மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு


தூத்துக்குடி, : தூத்துக்குடி மாநகராட்சியில் பத்து இடங்களில் மலிவு விலை உணவகங்கள் துவக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பத்து இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட் டுள்ளன. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னரே இதற் கான பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வந்த நிலையில் தற்போது தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோயில் பகுதி, ஸ்டேட் பாங்க் காலனி, புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை நுழைவாயில் உள்ளிட்ட பத்து இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதல்வர் ஜெயலலிதா அனைத்து அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோயில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை உணவகத்தில் அமைச்சர் செல்லப்பாண்டியன் உணவு விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசிஷ்குமார், மேயர் சசி கலாபுஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநகராட்சி கமிஷனர் மதுமதி, துணை மேயர் சேவியர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னதுரை, மாநகர அதிமுக செயலாளர் ஏசாதுரை, மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், தூத்துக்குடி யூனியன் சேர்மன் சண்முகவேல், மாவட்ட வக்கீல் அணி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 171 of 841