Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அம்மா உணவகங்கள் தயார்

Print PDF
தினமணி       31.05.2013

அம்மா உணவகங்கள் தயார்


முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், மதுரை மாநகராட்சி பகுதியில் ஆரப்பாளையம், ஆனையூர், கே. புதூர் ராமவர்மா நகர், காந்திபுரம், ராமராயர் மண்டபம், புது ராமநாதபுரம் சாலை, சிஎம்ஆர் சாலை, மேலவாசல், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் ஆகிய 10 இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன.

  இந்த உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் வியாழக்கிழமை மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் சமையல் முன்னோட்டம் நடைபெற்றது.

  மேயர் விவி ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால், நகர்நல அலுவலர் யசோதாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.   நிகழ்ச்சியில் உதவி ஆணையர் ரகோபெயாம், மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், அனுராதா தினேஷ், சண்முகவள்ளி, மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
 

சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக ‘‘அம்மா உணவகம்’’ உணவை சாப்பிட்டு ருசித்த மேயர் சவுண்டப்பன் பேட்டி

Print PDF
தினத்தந்தி       30.05.2013

சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக ‘‘அம்மா உணவகம்’’ உணவை சாப்பிட்டு ருசித்த மேயர் சவுண்டப்பன் பேட்டி


சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக‘‘ அம்மா உணவகம்’’ உள்ளது என்று உணவை சாப்பிட்டு பார்த்த மேயர் சவுண்டப்பன் கூறினார்.

அம்மா உணவகங்கள்

சேலம் மாநகராட்சியில் மலிவு விலையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் திறந்திட அரசு உத்தரவிட்டு உணவகங்கள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. ஒவ்வொரு உணவகங்களுக்கும் ரூ.3.70 லட்சம் மதிப்பில் 56 வகையான சமையல் பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள், நீராவி முறையில் இட்லி தயார் செய்யும் பாத்திரம் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.70 ஆயிரம் மதிப்பில் ஒவ்வொரு உணவகங்களிலும் சூரிய மின்சக்தி கலங்கள் அமைப்பதற்கான கருவிகள் வரப்பெற்றுள்ளன. இவைகள் அமைக்கும் பணி இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கொண்டலாம்பட்டி மண்டலம் கருங்கல்பட்டி, மணியனூர் ஆகிய உணவகங்கள் மற்றும் சூரமங்கலம் மண்டலம் பழைய சூரமங்கலம் சந்தைப்பேட்டை அருகில் மற்றும் சூரமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள வாசவி மகால் அருகில் உள்ள உணவகம் ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணியினை மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொண்டனர்.

மேயர்–அதிகாரிகள் ஆய்வு

இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன், துணை மேயர் நடேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சோதனை அடிப்படையில் தயார் செய்யப்பட்ட சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை சாப்பிட்டு ருசித்து பார்த்தனர். உணவு வகைகள் தரமானதாகவும், சுவை மிக்கதாகவும் இருந்ததாக மேயர் பாராட்டினார்.

இது குறித்து மேயர் சவுண்டப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் தனியார் உணவகங்களுக்கு இணையாக அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வசதிகள் செய்துதர உத்திரவிடப்பட்டுள்ளது. 10 அம்மா உணவகங்களும் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, செயற் பொறியாளர்கள் காமராஜ், அசோகன், மாநகர நல அலுவலர் டாக்டர்.வி.மலர்விழி, மண்டலக்குழுத்தலைவர்கள் தியாகராஜன், சண்முகம், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகம் அமைக்கும் பணி தீவிரம்

Print PDF
தினத்தந்தி       30.05.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகம் அமைக்கும் பணி தீவிரம்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அம்மா உணவகம்


முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மே மாதம் இறுதிக்குளம் மற்ற மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஒரு உணவகத்துக்கு 12 பேர் வீதம் 120 பேருக்கு சென்னை மற்றும் தூத்துக்குடியில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.

மும்முரம்

தூத்துக்குடி திரேஸ்புரம், சவேரியார்புரம், புதிய பஸ்நிலையம், ராஜாஜி பூங்கா, சத்திரம் தெரு, லூர்தம்மாள்புரம், ஜார்ஜ்ரோடு, ஸ்டேட் வங்கி காலனி, 2-ம் கேட் (வி.வி.டி. மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே, சந்தணமாரியம்மன் கோவில் தெரு(மீன் மார்க்கெட் அருகே) ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உணவகம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ஆனால் இந்த பணிகள் நாளைக்குள் முடிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்-அமைச்சர் அறிவித்தது போன்று நாளைக்குள் உணவகம் தொடங்கப்படுமா என்று பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் உணவகம் அமைக்கும் பணியில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
 


Page 178 of 841