Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மலிவு விலை உணவகத்தால் திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.2¾ கோடி கூடுதல் செலவு

Print PDF
தினத்தந்தி        29.05.2013

மலிவு விலை உணவகத்தால் திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.2¾ கோடி கூடுதல் செலவு


மலிவு விலை உணவகத் தால் திருப்பூர் மாநக ராட்சிக்கு ரூ.2¾ கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

மலிவு விலை உணவகம்

திருப்பூர் மாநகராட்சியில் மலிவு விலை உணவகம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒரு உணவகத்தில் காலையில் தலா 4 இட்லி, சாம்பார் 300 பேருக்கும், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் தலா 300 பேருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு இட்லிக்கு ரூ.3.64ம், சாம்பார் சாதத் துக்கு ரூ.14.73ம், தயிர் சாதத் துக்கு ரூ.7.44ம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் ஒரு இட்லி ரூ.1க் கும், சாம்பார் சாதம் ரூ.5க் கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்பனை செய்ய உள்ளது.

ரூ.2¾ கோடி செலவு


இதன்படி பார்த்தால் ஒரு நபருக்கு ஒரு இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம் விற்பனை செய்தால் மாநகராட்சிக்கு ரூ.16.81 பற்றாக்குறை ஏற் படும். ஒரு உணவகத்துக்கு நாள் ஒன்றுக்கு பற்றாக்குறை ரூ.7 ஆயிரத்து 419 ஆக இருக்கும். மாநகராட்சியில் 10 உண வகங்கள் செயல்பட்டால் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 71 லட்சம் கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை பொது நிதியில் இருந்து ஈடுகட்ட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுபோல் மலிவு விலை உணவகங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க மாநகர நல அதிகாரி தலைமையில் உதவி ஆணை யர், இளநிலை பொறியாளர், கணக்கு அதிகாரி, வரித்தண் டலர் மற்றும் சுகாதார ஆய் வாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருகிற 31ந் தேதி மேயர் விசாலாட்சி தலைமையில் நடக்கும் மாமன்ற கூட்டத்தில் தீர் மானம் கொண்டுவரப்படுகி றது.
 

அம்மா உணவகம்: திருப்பூருக்கு ரூ.2.71 கோடி கூடுதல் செலவு

Print PDF
தினமணி        29.05.2013

அம்மா உணவகம்: திருப்பூருக்கு ரூ.2.71 கோடி கூடுதல் செலவு


திருப்பூர் மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்கக் கூடிய அம்மா உணவகம் திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ.2.71 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் 15 வேலம்பாளையம் மண்டல அலுவலக வளாகம், கொங்கு பிரதான சாலை சாமியம்மாள் பள்ளி அருகிலும், பழைய பேருந்து நிலையம், குமரன் வணிக வளாகம், நல்லூர் மண்டல அலுவலக வளாகம், பாண்டியன் நகர், சந்திராபுரம், ஆத்துப்பாளையம், தென்னம்பாளையம் வாரச்சந்தைப் பகுதி, எ.வி.பி. சாலை என 10 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

அம்மா உணவகத்தில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு வழங்கப்படும். ஒரு உணவகத்தில் 300 பேருக்கு இந்த வகை உணவு வழங்கப்படும். ஒரு இட்லி, சாம்பாருக்கான செலவு ரூ.3.64; இதற்கான பற்றாக்குறை ரூ.2.64., ஒரு சாம்பார் சாதத்துக்கான செலவு ரூ.14.73; இதற்கான பற்றாக்குறை ரூ.9.73. ஒரு தயிர் சாதத்துக்கான செலவு ரூ.7.44; இதற்கான பற்றாக்குறை ரூ.4.44.

ஒரு அம்மா உணவகத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 பேருக்கு 1,200 இட்லி, 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் வழங்கப்படும். இதன்மூலமாக ஒரு உணவகத்துக்கு ஒரு நாளைக்கு ஏற்படும் பற்றாக்குறை ரூ.7,149; மாதத்திற்கு ரூ.2.22 லட்சம்; ஆண்டுக்கு ரூ.27.07 லட்சம். அதன்படி, 10 உணவகங்களுக்கு ஆண்டுக்கு ஏற்படும் பற்றாக்குறை ரூ.2.71 கோடி.

ஓராண்டுக்கு தேவையான பொருள்கள்:    10 உணவகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 200 டன் புழுங்கல் அரிசி, 91 டன் பச்சரிசி, 21 டன் உளுந்து, 67 டன் துவரம் பருப்பு, 18.25 டன் சமையல் எண்ணெய், 2.190 டன் வெந்தயம், 1.095 டன் பூண்டு, 2.920 டன் மிளகாய், 5 டன் புளி, 1 டன் மஞ்சள் பொடி, 4 டன் கடுகு, 4.5 டன் மசாலா, 0.45 டன் பெருங்காயம், 63 டன் வெங்காயம், 78 டன் தக்காளி, 45 டன் தயிர், 3,650 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (தலா 19 கி.கி.).

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேலை: அம்மா உணவகங்களில் உணவு தயாரித்து, விநியோகம் செய்வதற்கு மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 12 பேர் வீதம் 10 உணவகங்களுக்கு 120 பேருக்கு வேலை அளிக்கப்படும். அவர்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.250 வீதம் சம்பளம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கான மேற்கண்ட செலவுகள் உள்ளிட்ட அனுமதிக்கு வெள்ளிக்கிழமை (மே 31) நடைபெற இருக்கும் மாநகராட்சிக் கூட்டத்தில் மன்ற ஒப்புதலுக்கு தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
 

அம்மா உணவகம் மூலம் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருபவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பேச்சு

Print PDF
தினத்தந்தி               28.05.2013

அம்மா உணவகம் மூலம் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருபவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பேச்சு


அம்மா உணவகம் மூலம் ஏழை, எளியவர்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருபவர் முதல்– அமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

விலையில்லா பொருட்கள்


செய்யாறு ஊராட்சி ஒன்றி யம் திருமணி, கீழப்பழந்தை ஆகிய கிராமங்களில் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. செய்யாறு உதவி கலெக்டர் ஜனனி சவுந்தர்யா தலைமை தாங்கி னார். தனித்துணை கலெக் டர் (சிறப்பு திட்டங்கள்) ராணி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் விமலாமகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு தாசில்தார் பிரபா கரன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந் தினராக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 1,336 பயனாளிகளுக்கு விலை யில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி பேசி னார். அப்போது அவர்பேசிய தாவது:–

நலத்திட்டங்கள்

முதல்–அமைச்சர் ஜெய லலிதா மக்கள் கேட்காமலேயே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்கள் அரசை நாடி சென்று உதவிகளை கேட்டனர். ஆனால் அரசே மக்களை நாடி சென்று உதவிகளை செய்கிற நிலை மையை உருவாக்கியவர் ஜெயலலிதா. அம்மா திட்டத்தை அறிவித்து வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தாலுகாவில் உள்ள அனைத்து அலுவலர்களையும் வரவழைத்து மக்களிடம் குறைகளை கேட்டு அவர் களுக்கு உடனே உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளார் முதல்–அமைச்சர் ஜெய லலிதா.

அம்மா உணவகம்


ஏழை, எளிய மக்கள் நடுத்தர மக்கள் பசியாற உணவு சாப்பிட அம்மா உணவகம்  தொடங்கி இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய் என்று மலிவு விலையிலும் உணவுகளை வழங்கி வருகிறார். இந்த திட்டம் தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் தொடங் கப்படுகிறது.

தற்போது திருமணி கிராமத் தில் 1,033 குடும்பங்களுக்கு ரூ.56 லட்சத்து 36 ஆயிரத்து 652 மதிப்பிலும், கீழப்பழந்தை யில் 303 குடும்பங்களுக்கு ரூ.16 லட்சத்து 49 ஆயிரத்து 532 மதிப்பிலும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2011–12) 88 ஆயிரம் குடும் பங்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. 2012–13–ம் ஆண் டுக்கு 2 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார். இவ்வாறு அவர் பேசினார். விழாக்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் (திருமணி), சுதாவடிவேல் (கீழப்பழந்தை) மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.

வளர்ச்சி பணிகள் ஆய்வு

பின்னர் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். திருமணியில் தாய் திட்டத்தின் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணியையும், பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளின் கட்டுமான பணிகளையும், திருமணி– ஆரணி சாலையில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப் பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருவதையும் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் ஜனனிசவுந்தர்யா, ஊரக வளர்ச்சித்துறையின் உதவி கோட்ட பொறியாளர் எஸ்.பெருமாள், செய்யாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.பெருமாள், குகாநந்தன், வெம்பாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா, சித்ரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
 


Page 180 of 841